கோடை கால உணவுகள் - பகுதி - 2

கோடை கால  உணவுகள் - பகுதி - 2


கோடை கால  உணவுகளில் முதன்மையானது - கம்பு 



                    கம்பு ஒரு சிறு தானியம். சிறு தானிய வகைகளில் அதிகமாக விளைய கூடியது.

                    கம்பு பயிரானது அதிக வெப்பத்தையும் எதிர்த்து குறைந்த அளவு நீரிலும்  வளர கூடியது.

                 கம்பு - தமிழ், பியர்ல் மில்லட் - ஆங்கிலம் , சஜஜுலி  - தெலுங்கு, கம்பம் - மலையாளம், பஜ்ரா - கன்னட மொழியுலும் அழைக்கபடுகிறது.

கம்பு உணவுகளை உண்பதால் ஏற்படும் நன்மைகள்:


* உடல் வெப்பத்தை சீராக வைக்க உதவும்.
* புரத சத்து  நிறைந்தது .
* உடலில் நீர் சத்தை சம நிலை படுத்தும்.
* இரைப்பையின்  அமில தன்மையை குறைக்கும்.
* இதய நோய் வராமல் பாதுகாக்கும்.
* கால்சியம், இரும்பு சத்து , நார் சத்து  மற்றும் உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் அதிகமாக உடையது.

இந்த கோடைக்கேற்ற  சிறந்த உணவு:


கம்பங் கூழ்.


தேவையான பொருட்கள் :


  • கம்பு மாவு / கம்பு - 1 கப் 
  • நீர் - 2 லிட்டர் 
  • உப்பு - தேவைக்கேற்ப 
  • மோர் - 1 கப் 

செய்முறை :


  • கம்பை சுத்தம் செய்து ஒன்றிரண்டாக பொடித்து கொள்ள வேண்டும்.
  • தேவையான அளவு நீரில் கலந்து  உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும்.
  • குடிக்கும் பொழுது மோர் கலந்து குடிக்கலாம்.


தொட்டு கொள்ள: சிறிய வெங்காயம், பச்சை மிளகாய் சிறந்ததாக இருக்கும்.




     

Comments

Popular posts from this blog

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாரம்பரிய தமிழ் உணவுகள்

What Is Good to Eat on an Empty Stomach in the Morning?

Traditional Tamil Foods to Boost Immunity