கோடை கால உணவுகள் - பகுதி- 3
பச்சை நிறத்தில் பாம்பு போல இருக்கும் இந்த வெள்ளரி பிஞ்சு வெயிலுக்கு ஏற்ற ஒரு நொறுக்கு தீனியாகும்.
- வெள்ளரி பிஞ்சு வருடத்தின் ஏப்ரல், மே மாதங்களில் கிடைக்கும்.
- நல்ல பச்சை உறுதியாக இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும்
- உண்பதற்கு முன் நன்றாக நீரில் கழுவ வேண்டும்
- தோலை நீக்கி விட்டு உண்ண கூடாது. ஏனெனில் தோலில் உடலுக்கு தேவையான கனிம சத்துகள், நார் சத்துகள் இருக்கின்றது .
- அறை வெப்ப நிலையில் ஒன்றிரண்டு நாட்களுக்கு வைத்து இருக்கலாம்.
- வெள்ளரி பிஞ்சுகளை அப்படியே உண்ணலாம்.
வெள்ளரி பிஞ்சுகளை உண்பதால் ஏற்படும் உடல் நல பயன்கள்:
* 96 சதவீதம் நீர் நிறைந்தது. எனவே உடலின் நீர் சத்தையும் , உடல் வெப்பத்தை சம நிலைப்படுத்த உதவுகிறது.
* வைட்டமின் - கே , அதிகமாக உடையது. இது ரத்த உறைவு நேரத்தை குறைக்கும்.
* குறைந்த கலோரிகளை உடையது. எடையை குறைப்பவர்களுக்கு ஏற்ற உணவு.
No comments:
Post a Comment