உலக சுகாதார தினம். - ஏப்ரல் 7

உலக சுகாதார தினம். - ஏப்ரல் 7




உலக சுகாதார தினம் 1950 முதல் ஆண்டுதோறும் அப்போதைய அவசியத்தை ஒட்டிய ஒரு கருப்பொருளில் ஏப்ரல் 7 ம் தேதி உலக சுகாதார நிறுவனத்தின் ஆதரவில் கொண்டாடப்படுகிறது.

2016 ம்  ஆண்டின் கருப்பொருள் : 


  எழுச்சியை தடுப்போம் : 

நீரிழிவு   நோயை ஒழிப்போம்.


நீரிழிவு நோய்:


  • இது ஒரு வளர் சிதை மாற்ற நோயாகும்.
  • ஒருவரின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாவதே நீரிழிவு நோயாகும்.

காரணங்கள் :


  • உடலில் இன்சுலின் சுரப்பு குறைவு 
  • செல்கள் இன்சுலினை ஏற்று கொள்ளாதது 

அறிகுறிகள் :


  • அதிக சிறுநீர் வெளியேறுதல் 
  • அதிகமாக பசி எடுத்தல் 
  • நா வறட்சி 

நீரிழிவு நோயின் வகைகள்:


வகை 1 : 

# இது இன்சுலின் சுரப்பு குறைவினால் ஏற்படுவது.
# இது 40 வயது குறைவானவர்களுக்கு ஏற்படும். குறிப்பாக பதின் பருவத்தில் இருப்பவர்களுக்கு ஏற்படும்.

வகை 2 :  உலகில் 90% மக்கள் பாதிக்கபடுகிறார்கள் . செல்களில் இன்சுலின் எதிர்ப்பு சக்தி குறைவதால் ஏற்படுகிறது.

வகை 3 : கர்ப்ப கால நீரிழிவு நோய்: 

#இது பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படுவது. சில பெண்களுக்கு சர்க்கரையின்  அளவு இரத்தத்தில் அதிகமாகும். ஏனெனில் இன்சுலின் சுரப்பு குறைவாக இருக்கும்

# நீரிழிவு நோயை ஆரம்ப நிலையிலே கண்டுபிடிப்பதன் மூலம் இதை கட்டுக்குள் வைக்க முடியும். 



சர்க்கரையின் அளவுகள்:


வெறும் வயிற்றில்  - 100 குறைவாக 

உணவுக்கு முன் - 70-130
உணவுக்கு பின் 
(1-2 மணி நேரத்தில்) - 180 க்கு குறைவாக 


சிகிச்சை : உணவுக்  கட்டுப்பாடே  நீரிழிவு நோய்க்கான சிறந்த சிகிச்சையாகும்.


* சம சீரான உணவை உட்கொள்ள வேண்டும்.
* வெள்ளை அரிசியை தவிர்த்து பாரம்பரிய அரிசி ரகங்கள், கை குத்தல் அரிசியை எடுத்து கொள்ளலாம்.
* கேழ்வரகு, கம்பு, வரகு, சாமை போன்ற சிறு தானியங்களை சேர்த்து கொள்ள வேண்டும்.
* முளை கட்டிய பயறு வகைகளை தினமும் சாப்பிட வேண்டும்.
*அதிக அளவில் காய்கறிகளை சேர்த்து கொள்ள வேண்டும், ஏனெனில் நார் சத்து, வைட்டமின் , தாது பொருட்கள் நிறைந்து உள்ளது.
* நாள் ஒன்றுக்கு 400 கிராம் அளவுக்கு காய்கறிகளை சாப்பிட வேண்டும்.
* நார் சத்து நிறைந்த கீரை வகைகள், நீர் காய்களான பூசணி, பீர்கங்காய், புடலங்காய் அதிக அளவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
* பழங்களை சாறு பிழியாமல் அப்படியே சாப்பிடுவது நல்லது.
* முட்டையின் வெள்ளை கருவை மட்டும் உட்கொள்ள வேண்டும்.
* மீன் உணவுகளை வேக வைத்தோ, குழம்பாகவோ எடுத்து கொள்ளலாம்.
* கோழி இறைச்சியை கிரில் செய்தோ, வேக வைத்தோ சாபிடலாம்.
* என்னில் பொறித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
* ஆட்டிறைச்சி சாப்பிடாமல் இருப்பது நல்லது..
* ஒரு நாளைக்கு குறைந்தது  3 லிட்டர் குடி நீர் பருக வேண்டும்.
* நல்லெண்ணெய், கடலைஎண்ணெய், தேங்காய் எண்ணெய் , ஆலிவ்  எண்ணெய் பயன்படுத்துவது  நல்லது.


# சர்க்கரையின் அளவை அடிக்கடி பரிசோதனை செய்வது இதை கட்டுக்குள் வைத்திருக்க பயன்படும்.
# உடற்பயிற்சி செய்வது நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.




Comments

Popular posts from this blog

What Is Good to Eat on an Empty Stomach in the Morning?

Traditional Tamil Foods to Boost Immunity

Common Nutrition Mistakes Among Tamil Nadu People