Saturday, 14 May 2016

பாரம்பரிய உணவுகள் : பகுதி - 1

பாரம்பரிய உணவுகள் : பகுதி - 1




பாரம்பரிய உணவுகள் என்பது பல தலைமுறைகளாக  நம் உணவு  பழக்கத்தில்  இருப்பது.

பாரம்பரிய உணவுகள் நம் உடல் நலத்திற்கு ஏற்றது.

நாம் வாழும் வாழ்க்கை  முறையினால் ஏற்படும் உடல் நல கோளாறுகளை சரி செய்ய உதவும்.

இவை இயற்கையுடன் இணைந்து இருப்பது.
பாரம்பரிய உணவுகள் நாம் வாழும் தட்ப வெப்பத்திற்கு ஏற்ப உருவானவை.

நம் தமிழ் நாட்டின் உணவுகள் அந்த அந்த பகுதிகேற்ப சிறப்பான உணவுப்பழங்களை கொண்டது.

செட்டிநாடு, நாஞ்சில் நாடு, கொங்கு நாடு என பல பகுதிகளின் உணவுகள் அடங்கியது.


பொதுவான உணவுகள் :


சிற்றுண்டி  வகைகள் : இட்லி ,தோசை ,பொங்கல் ,இடியாப்பம் , உப்புமா, ஊத்தப்பம் , அடை , பணியாரம், ஆப்பம்.



மதிய உணவுகள் : விருந்து சாப்பாடு, கலந்த சாத வகைகள், பொரியல், கூட்டு, அவியல், துவையல் 


சிறப்பு உணவுகள் : கூழ், கொழுக்கட்டை, 


காபி  தமிழ் நாட்டின் சிறப்புகளுள் ஒன்று.



சிறந்த மாலை நேர சிற்றுண்டி 



சீராளம் 


தேவையான பொருட்கள்:


புழுங்கல் அரிசி - 1 கப்
 துவரம் பருப்பு - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 4
இஞ்சி - 1/4 துண்டு
பூண்டு - 4 பல்

தாளிக்க :


கடுகு - 1/4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/4  தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 2
மஞ்சள் தூள்
பெருங்காய தூள்
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை -  சிறிதளவு


செய்முறை :

* அரிசி, பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து , இஞ்சி, பூண்டுடன்  சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

* அரைத்த மாவுடன் உப்பு, நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.

* அரைத்த மாவை இட்லி வேக வைப்பது போல் வேக வைத்து எடுத்து கொள்ளவும்.

* இட்லிகளை சிறு சிறு துண்டகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

* வானலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.

* கறிவேப்பிலை , பெருங்காயம்,  மஞ்சள் பொடி சேர்த்து வதக்கும் பொழுது வெட்டி வைத்த இட்லி துண்டங்களை போட்டு நன்றாக வதங்கும் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.

* சுவையான மாலை நேர சிற்றுண்டி தயார்.














No comments:

Post a Comment

நீரிழிவு மேலாண்மைக்கான சிறந்த இந்திய உணவுகள்

நீரிழிவு மேலாண்மைக்கான சிறந்த இந்திய உணவுகள்       நீரிழிவு நோயை நிர்வகிப்பது பெரும்பாலும் அதிக மனஅழுத்தத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக முரண்ப...