கோடை கால உணவுகள் - பகுதி 13

கோடை கால உணவுகள் - பகுதி   13


வெட்டி வேர் 


* புல் வகையை சேர்ந்த இந்த வெட்டி வேர் தென்னிந்தியாவில் அதிகமாக கிடைக்க கூடியது.


பயன்கள் :


*  வெட்டி வேர்  போட்டு வைத்த நீரை அருந்துவதால் உடல் சூட்டை தணிக்கலாம்

*  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

*  நரம்பு தளர்ச்சியை குணப்படுத்தும்.

* காயங்களை விரைவில் சரியாகும்.

*  தோலில் ஏற்படும் தழும்புகளை குணப்படுத்தும்.




வெட்டி வேர் சர்பத் 




தேவையான பொருட்கள் 


சிரப் செய்ய :


வெட்டி வேர்  - 50 கிராம் 

சர்க்கரை  - 600 கிராம் 

தண்ணீர்  - ஒரு லிட்டர் 

சர்பத் செய்ய:


சிரப் - 3  மேஜை கரண்டி 

தண்ணீர் - ஒரு கப் 

எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி 





செய்முறை :


# வெட்டி  வேரை சுத்தம் செய்து கழுவி சிறுசிறு துண்டுகளாக வெட்டி 8 முதல் 10 மணி நேரம் ஒரு லிட்டர் தண்ணீரில் ஊற வைக்கவும்.

# பிறகு மெல்லிய துணியில் வடிகட்டவும்.

# இந்த நீருடன் சர்க்கரை சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து ஒரு கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்.

# ஆறியவுடன் சுத்தமான பாட்டிலில் ஊற்றி  குளிர்பதன பெட்டியில் வைத்து பயன்படுத்தவும்.

# வெட்டிவேர் சிரப் தயார்

# சர்பத் செய்ய சிரப்புடன், எலுமிச்சை சாறு  மற்றும் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.


Comments

Popular posts from this blog

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாரம்பரிய தமிழ் உணவுகள்

What Is Good to Eat on an Empty Stomach in the Morning?

Traditional Tamil Foods to Boost Immunity