பாரம்பரிய உணவுகள் - பகுதி 2
பீட்ரூட் கோலா உருண்டை
தேவையான பொருட்கள் :
பீட் ரூட் : 2
துவரம் பருப்பு - 100 கிராம்
கடலை பருப்பு - 100 கிராம்
வெங்காயம் - 1
பூண்டு - 10 பல்
சோம்பு - 1 தேனீர் கரண்டி
ஜீரகம் - 1 தேனீர் கரண்டி
தேங்காய் ( துருவியது ) - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 5
கடலை மாவு - 1/4 கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
# துவரம் பருப்பு, கடலை பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து , அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
# இந்த மாவுடன் வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், சோம்பு, ஜீரகம் சேர்த்து நன்றாக அரிது கொள்ளவும்.
# பீட்ரூட்டை தோல் சீவி, துருவி வைத்து கொள்ளவும்.
# ஒரு பாத்திரத்தில் துருவிய பீட்ரூட், அரைத்த மாவு இரண்டையும் போட்டு தேவையான அளவு உப்பு , கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகளை சேர்த்து பிசையவும்.
# அதனுடன் கடலை மாவு சேர்த்து நன்றாக கலக்கவும்.
# கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து எண்ணெய் சூடானவுடன் பீட்ரூட் கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
# சுவையான பீட்ரூட் கோலா உருண்டை தயார்.
குறிப்புகள் :
* மாலை சிற்றுண்டிக்கு ஏற்றது* செட்டிநாட்டு சமையல் வகையை சேர்ந்தது.
* பீட்ரூட் சாப்பிட பிடிக்காதவர்களுக்கும் ஏற்ற ஒரு உணவாகும்.
No comments:
Post a Comment