பாரம்பரிய உணவுகள் - பகுதி 3

பாரம்பரிய உணவுகள் - பகுதி 3

# பாரம்பரிய உணவுகளில் பத்திய சமையல் என்று உண்டு.

# விருந்துகளில் அல்லது விழாக்காலங்களில் அதிகமாக இனிப்பையோ கார உணவுகளையோ உண்டு அதனால் ஏற்படும் வயிற்று பிரச்சினைகளை சரி செய்ய பத்திய சமையல் உதவுகிறது

# இன்று தேங்காய் துவையல் , கண்டதிப்பிலி ரசம் செய்முறைகளை பார்ப்போம்.


தேங்காய் துவையல் 




தேவையான பொருட்கள் :


தேங்காய்  (துருவியது) - 1 கப்

எண்ணெய் - 2 தேக்கரண்டி

கடுகு - சிறிதளவு

உளுத்தம் பருப்பு  - 2 மேஜை கரண்டி

காய்ந்த மிளகாய் - 3- 4

புளி - சிறிதளவு

பெருங்காயம்  - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை :


# அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் கடுகை போடவும்.

# கடுகு வெடித்ததும் , உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம்  சேர்த்து வறுக்கவும்.

# பருப்பு நன்றாக சிவக்கும் வரை வறுக்கவும்

# பிறகு , தேங்காய் சேர்த்து வறுத்து இறக்கவும்.

# புளி, உப்பு சேர்த்து வறுத்தவற்றை அதிகம் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------


கண்டந்திப்பிலி ரசம் 



தேவையான பொருட்கள் :


புளி - ஒரு கோலிக்குண்டு அளவு 

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி 

பெருங்காயம் - தேவையான அளவு 

கறிவேப்பிலை - சிறிதளவு 

துவரம் பருப்பு - 1 கப் (வேக வைத்தது)

உப்பு - தேவையான அளவு 

வறுத்து அரைக்க :


கண்டந்திப்பிலி - 4

மிளகு - 1 தேக்கரண்டி 

உளுத்தம் பருப்பு - 1 மேஜைகரண்டி 

சீரகம் - 1 தேக்கரண்டி 

தாளிக்க :


நெய் - 1 தேக்கரண்டி 

சீரகம் - 1/2 தேக்கரண்டி 

கடுகு - 1/2 தேக்கரண்டி 

காய்ந்த மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிதளவு 

செய்முறை :


# வெறும் கடாயில் கண்டந்திப்பிலி , மிளகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும்.

# நன்றாக சிவந்தவுடன் சீரகம் சேர்த்து இறக்கவும்.

# ஆறியவுடன் இந்த கலவையை பொடி செய்து வைத்து கொள்ளவும்.

# புளியை வென்னீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும். 

# அடுப்பில் ரசம் செய்யும் பாத்திரத்தை வைத்து புளிக்கரைசல் , மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு , பொடித்து வைத்த ரசப்பொடி சேர்த்து கொதிக்க விடவும்.

# புளியின் வாசனை மாறிய பிறகு. வேக வைத்த பருப்பை நீர் விட்டு கலக்கி ரசத்துடன் சேர்த்து கொதிக்க விடவும்.

# தனியாக கடாயில் நெய்  ஊற்றி சூடானவுடன் கடுகு, சீரகம் சேர்த்து அது வெடித்ததும், காய்ந்த மிளகாய் , கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ரசத்துடன் மேல் சேர்க்கவும்.


குறிப்புகள்:


* தேங்காய் துவையல், கண்டந்திப்பிலி ரசம் இரண்டையும் சூடான சாதத்துடன் பரிமாறவும் 

* தொட்டு கொள்ள ஏதேனும் பொரியல் அல்லது சுட்ட அப்பளம் நன்றாக இருக்கும்.

* கண்டந்திப்பிலி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

* இந்த உணவுகள் செரிமான சக்தியை அதிகரிக்கும்.






Comments

Popular posts from this blog

What Is Good to Eat on an Empty Stomach in the Morning?

Traditional Tamil Foods to Boost Immunity

Common Nutrition Mistakes Among Tamil Nadu People