கோடை கால உணவுகள்

கோடை கால உணவுகள் - பகுதி 15






# கோடை காலத்தில் உள்ள அதிக வெயிலை பயன்படுத்தி நாம் அடுத்த ஆண்டு முழுமைக்கான சில உணவுகளை தயார் செய்ய முடியும்.

# கொத்தவரங்காய் வத்தல் , மோர் மிளகாய், மாவடு, ஆவக்காய் ஊறுகாய். போன்றவை இந்த சமயத்தில் செய்து வைத்து கொள்ளலாம்.

# இவை தவிர பல வகையான வத்தல் வகைகளை நாம் தயாரிக்கலாம்.



மாவடு 




தேவையான பொருட்கள்  :


வடு மாங்காய் - 1/2  கிலோ 

உப்பு - 1/2 கப் 

மிளகாய் தூள்  - 50 கிராம் 

மஞ்சள் தூள் - 2 தேக்கரண்டி 

கடுகு - 2 மேஜை கரண்டி 

நல்லெண்ணெய் -  4 மேஜை கரண்டி 


செய்முறை :


* வடு மாங்காயை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

* தண்ணீர் போக நன்றாக காய்ந்ததும் அதில் உப்பு, மஞ்சள் தூள் , நல்லெண்ணெய் சேர்த்து கலக்கி ஒரு நாள் முழுவதும் ஊற விடவும்.

* கடுகை பொடி செய்து கொள்ளவும்.

* கடுகு பொடி , மிளகாய் தூள் இரண்டையும் வடு மாங்காவில் சேர்த்து கரண்டியால் கலக்கவும்.

* இந்த கலவையை ஒரு வாரம் வரையில் அப்படியே வைத்திருக்கவும். வடு மாங்காயில் உள்ள நீரே போதுமானது. அதனால் தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

* தினமும் இரண்டு முறை கரண்டியால் கிளறி விடவும்.

* சுவையான வடு மாங்காய் தயார்.

* இது தனியாகவும், சாதத்துடன் தொட்டு கொள்ளவும் ஏற்றது.


கொத்தவரங்காய் வத்தல் 


தேவையான பொருட்கள் :


கொத்தவரங்காய்  - 1/4 கிலோ 

உப்பு - சிறிதளவு 

மோர் - 1/4 கப் 

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 

செய்முறை :


# நன்றாக முதிர்ந்த கொத்தவரங்காய் வாங்கவும்.

# அடுப்பில் நீர் வைத்து சூடானவுடன் அதில் உப்பு  சேர்த்து கொதிக்க விடவும்.

# பிறகு அதில் கொத்தவரங்காய் சேர்த்து 5 நிமிடம் வேக விடவும்.

# சிறிது நேரம் கழித்து நீரில் இருந்து எடுத்து ஒரு தட்டில் பரப்பி கைய விடவும்.

# அடுத்த நாள் மோருடன் மிளகாய் தூள் சேர்த்து அதை கொத்தவரங்காய் உடன் சேர்த்து நன்றாக கலந்து வெய்யிலில் காய விடவும்.

# 3 -4 நாட்கள் நன்றாக உலரும் படி காய வைக்கவும்.

# காற்று புகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தலாம்.

# தேவை படும் பொழுது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம். 












Comments

Popular posts from this blog

What Is Good to Eat on an Empty Stomach in the Morning?

Traditional Tamil Foods to Boost Immunity

Common Nutrition Mistakes Among Tamil Nadu People