பாரம்பரிய உணவுகள் பகுதி - 4
* இந்தியாவின் தென் எல்லையாம் கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறப்பு உணவுகள் பெரும்பாலும் அரிசியாக இருந்தாலும்,, அங்கே மரவள்ளி கிழங்கு உணவுகளும் உண்டு.
* அங்கே எல்லா மக்களும் மீன் மற்றும் இதர அசைவ உணவுகளை விரும்புவார்கள்.
* கன்னியாகுமரி மாவட்ட உணவுகள் பெரும்பாலும் அதிக காரத்துடனும் குறைந்த பொருட்களை பயன்படுத்தி செய்வதாகவும் இருக்கும்.
* தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் அதிகமாக பயன்படுத்தப்படும்.
* முந்திரி கொத்து கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு இனிப்பு வகையாகும்.
முந்திரி கொத்து
தேவையான பொருட்கள் :
செய்முறை :
- கடாயில் பச்சை பயறு மற்றும் ஏலக்காய் இரண்டையும் வறுத்து கொள்ள வேண்டும்.
- பச்சை பயறு, ஏலக்காய் , சுக்கு சேர்த்து பொடித்து கொள்ளவும்.
- தேங்காய், எள் இரண்டையும் எண்ணெய் சேர்க்காமல் பொடி செய்த பச்சை பயற்றுடன் கலக்கவும் .
- வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து பாகு வைக்கவும்.
- பச்சை பயறு பொடியை பாகுடன் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும்.
- அரிசி மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்து அந்த உருண்டைகளை மேல்மாவாக படரும்படி செய்யவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி .காய்ந்ததும் இந்த உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
No comments:
Post a Comment