Friday, 30 March 2018

உலக இட்லி தினம் - மார்ச் 30

உலக இட்லி தினம் - மார்ச்  30




   

# இட்லி தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவு. 

# குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற  உணவு. 

# ஆவியில் வேக வைப்பதால் எளிதில் செரிமானமாகும்.

#எரிசக்தியும் புரதமும் இணைந்த மிக சிறந்த காலை உணவு.

# ஆரோக்கிய உணவுகளில்  முதலிடத்தில் இருப்பது இட்லி 

# இட்லி பொதுவாக அரிசி மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து செய்யப்படும். சாமை, கம்பு, கேழ்வரகு, வரகு அரிசி ஆகியவற்றை பயன்படுத்தியும் இட்லி செய்யலாம்.






காஞ்சிபுரம் இட்லி 



தேவையான பொருட்கள் :


பச்சரிசி - 1/2 கப் 

இட்லி அரிசி - 1/2 கப் 

உளுத்தம் பருப்பு - 1/2 கப் 

உப்பு - தேவையான அளவு 


தாளிக்க :


நெய் - 2 தேக்கரண்டி 

கருப்பு எள் - 1 தேக்கரண்டி 

கடுகு  - 1 தேக்கரண்டி 

அரை உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி 

கடலை பருப்பு - 1 தேக்கரண்டி 

மிளகு - 2 தேக்கரண்டி 

சுக்கு பொடி - 1/4 தேக்கரண்டி 

சீரகம் - 1 தேக்கரண்டி 

இஞ்சி - 1 துண்டு 

மஞ்சள் தூள் - சிறிதளவு 


செய்முறை :


# அரிசி மற்றும் உளுந்தை தனி தனியாக 5 மணி நேரம் ஊற வைக்கவும் 

# ஊற வைத்த அரிசி உளுந்தை தனித்தனியாக அரைத்து உப்பு சேர்த்து கலக்கி வைத்து கொள்ளவும்.

# இட்லி தயார் செய்வதற்கு ஒரு நாள் முன் மாவை தயார் செய்யவும். மாவு புளித்து இருந்தால் தன இட்லி நன்றாக வரும்.

# இட்லி தயார் செய்வதற்கு முன் அதில் மஞ்சள் தூள், பெருங்காயம், சுக்கு பொடி சேர்க்கவும்.

# ஒரு கடாயில் நெய் ஊற்றி காயந்ததும் அதில் கடுகு போட்டு வெடித்ததும், தாளிக்க கொடுத்துள்ள மற்ற பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.

# பிறகு அதை மாவில் சேர்த்து கலக்கவும்.

# பிறகு  என்னை தடவிய சிறிய டம்ளர் - களில் மாவை நிரப்பி  வேக வைத்து எடுத்தால் சுவையான இட்லி தயார்.


# இதனுடன் சாம்பார் மற்றும் சட்னி சேர்த்து பரிமாறலாம்.






No comments:

Post a Comment

Start the Year Right: Building a Healthy Eating Routine in 2025

Start the Year Right  Building a Healthy Eating Routine in 2025      As the clock strikes midnight and a new year begins, it’s the perfect ...