Showing posts with label bhogi. Show all posts
Showing posts with label bhogi. Show all posts

Sunday, 14 January 2024

போகி பண்டிகை

 போகி பண்டிகை 



" பழையன கழிதலும் புதியன புகுதலும் " 


    மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தைத்திங்களை வரவேற்கும் விதமாக வீடுகளை சுத்தம் செய்து வெள்ளை அடித்து அனைவரும் தயாராவார்கள். இந்தியா முழுவதும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. 


    இந்த நாள் " பழையன கழிதலும் புதியன புகுதலும் " நாளாக கொண்டாடப்படுகிறது. பழையவற்றையும், பயனில்லாத விஷயங்களையும் விடும் நாளாக கருதப்படுகிறது. பழைய பொருட்களை வெளியேற்றுவதோடு அல்லாமல் தீய பழக்கங்கள் , தேவை இல்லா எதிர்மறை எண்ணங்கள் ஆகியவற்றை விட்டொழிக்க வேண்டும். 


          புதியன புக என்னும் சொல்லுக்கு ஏற்ப நேர்மறை எண்ணங்களை அதிகரித்து, வாழ்வில் மகிழ்ச்சி அடைய வேண்டும். இருளின் ஆதிக்கம் நிறைவடைந்து ஒளியின் ஆட்சி பெருகட்டும். 

    

       போகி  அன்று பழைய பொருட்களை தீயிலிட்டு கொளுத்தும் பழக்கம் தமிழகத்தின் பல பகுதிகளில்  உள்ளது. கொங்கு பகுதியில் வீடு கூரையில் ஆவாரம்பூ, பூளைப்பூ மற்றும் வேப்பிலை கொத்துக்களை சொருகி வைக்கும் பழக்கம் உள்ளது. இன்னும் சில பகுதிகளில் நிலை பொங்கல் வைத்து வழிபடும் வழக்கமும் உள்ளது. 




 

Start the Year Right: Building a Healthy Eating Routine in 2025

Start the Year Right  Building a Healthy Eating Routine in 2025      As the clock strikes midnight and a new year begins, it’s the perfect ...