பாரம்பரிய உணவுகள் - பகுதி 3

பாரம்பரிய உணவுகள் - பகுதி 3




# இட்லி தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவு 

# குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் உணவு 

# ஆவியில் வேக வைப்பதால் எளிதில் செரிமானமாகும்.

#எரிசக்தியும் புரதமும் இணைந்த மிக சிறந்த காலை உணவு.


காஞ்சிபுரம் இட்லி 



தேவையான பொருட்கள் :


பச்சரிசி - 1/2 கப் 

இட்லி அரிசி - 1/2 கப் 

உளுத்தம் பருப்பு - 1/2 கப் 

உப்பு - தேவையான அளவு 


தாளிக்க :


நெய் - 2 தேக்கரண்டி 

கருப்பு எள் - 1 தேக்கரண்டி 

கடுகு  - 1 தேக்கரண்டி 

அரை உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி 

கடலை பருப்பு - 1 தேக்கரண்டி 

மிளகு - 2 தேக்கரண்டி 

சுக்கு பொடி - 1/4 தேக்கரண்டி 

சீரகம் - 1 தேக்கரண்டி 

இஞ்சி - 1 துண்டு 

மஞ்சள் தூள் - சிறிதளவு 


செய்முறை :


# அரிசி மற்றும் உளுந்தை தனி தனியாக 5 மணி நேரம் ஊற வைக்கவும் 

# ஊற வைத்த அரிசி உளுந்தை தனித்தனியாக அரைத்து உப்பு சேர்த்து கலக்கி வைத்து கொள்ளவும்.

# இட்லி தயார் செய்வதற்கு ஒரு நாள் முன் மாவை தயார் செய்யவும். மாவு புளித்து இருந்தால் தன இட்லி நன்றாக வரும்.

# இட்லி தயார் செய்வதற்கு முன் அதில் மஞ்சள் தூள், பெருங்காயம், சுக்கு பொடி சேர்க்கவும்.

# ஒரு கடாயில் நெய் ஊற்றி காயந்ததும் அதில் கடுகு போட்டு வெடித்ததும், தாளிக்க கொடுத்துள்ள மற்ற பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.

# பிறகு அதை மாவில் சேர்த்து கலக்கவும்.

# பிறகு  என்னை தடவிய சிறிய டம்ளர் - களில் மாவை நிரப்பி  வேக வைத்து எடுத்தால் சுவையான இட்லி தயார்.
# இதனுடன் சாம்பார் மற்றும் சட்னி சேர்த்து பரிமாறலாம்.



   

Comments

Popular posts from this blog

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாரம்பரிய தமிழ் உணவுகள்

What Is Good to Eat on an Empty Stomach in the Morning?

Traditional Tamil Foods to Boost Immunity