உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்கும் பழச்சாறு வகைகள்
நம்மில் பல பேருக்கு பழங்களை அப்படியே சாப்பிடுவதை விட பழச்சாறாக குடிப்பது பிடிக்கும். ஆனால் பழங்களை அப்படியே சாப்பிடும் பொழுது அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் மாற்றமின்றி கிடைக்கும். பழச்சாறாக மாற்றும் பொழுது தோல் நீக்கப்படுவதால் நார்ச்சத்து குறையும். சர்க்கரை மூலக்கூறுகள் அடர்த்தியாகும் மற்றும் எளிதில் ஜீரணமாகும்.
ஒரே ஒரு பழத்தின் சாற்றை அருந்தாமல் சில பழங்களை கலந்து பழச்சாறாக அருந்தும் பொழுதுஅவை உடலுக்கு நன்மை பயக்கும். அதில் சில வகைகளை காண்போம்.
அன்னாசி - பப்பாளி பழச்சாறு
தேவையான பொருட்கள்
அன்னாசிப்பழம் - 100 கிராம்
பப்பாளிப்பழம் - 100 கிராம்
குளிர்விக்கப்பட்ட பால் - 100 மில்லி
நாட்டு சர்க்கரை - 1 தேக்கரண்டி
செய்முறை
- அன்னாசி மற்றும் பப்பாளி பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- மிக்ஸில் ஜாரில் பழத்துண்டுகளையும், குளிர்விக்கப்பட்ட பால், நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்து தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகளை சேர்த்து பரிமாறவும்.
நன்மைகள்
- வைட்டமின் சி , இ , மற்றும் பி நிறைந்தது.
- ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.
- நோய் எதிர்ப்பு தண்மையை அதிகரித்து உடலில் உள்ள வீக்கத்தை குறைக்கிறது.
- வாத பிரச்சனை உள்ளவர்கள் அருந்துவதற்கு ஏற்ற பானமாகும்.
- சுவை மிகுந்த சத்துள்ள பானமாகும்.
- இதயத்தை வலுவடைய செய்து இதய நோய்களில் இருந்து காத்து கொள்ள உதவுகிறது.
No comments:
Post a Comment