உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்கும் பழச்சாறு வகைகள் - 5
ஆரஞ்சு - நெல்லி பழச்சாறு
தேவையான பொருட்கள்
ஆரஞ்சு - 1
நெல்லிக்காய் - 1
எலுமிச்சை சாறு - சிறிதளவு
இஞ்சி - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
செய்முறை
- ஆரஞ்சை தோல் நீக்கி சுளைகளை தனியே எடுத்து கொள்ள வேண்டும்.
- நெல்லிக்காயை நன்கு கழுவி துருவி கொள்ள வேண்டும்
- மிக்ஸியில் ஆரஞ்சு சுளைகள், துருவிய நெல்லிக்காய், துருவிய இஞ்சி, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். தேவையெனில் சிறிது நீர் சேர்த்து கொள்ளவும்.
- தயாரித்த உடன் அருந்தவும். அருந்தும் முன் சிறிது தேன் சேர்த்து கொள்ளலாம்.
ஆரஞ்சு நெல்லி பழச்சாறின் நன்மைகள்
- வைட்டமின் சி நிறைந்தது. எனவே நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது.
- சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது.
- இதில் வீக்கத்தை கட்டுப்படுத்தும் காரணிகள் இருப்பதால் வாதத்தினால் உண்டாகும் வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது.
- வைட்டமின் சி,பி 1, இரும்பு சத்து, பொட்டாசியம், துத்தநாக சத்து, பாஸ்பரஸ் ஆகியவை நிறைந்தது.
- செரிமான சக்தியை மேம்படுத்துகிறது.
- தோல் ஆரோக்கியத்தை காக்கிறது.
- இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- மழைக்கால நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
- கல்லீரலை பாதுகாக்கிறது.
- உடல் எடை குறைய உதவும்
No comments:
Post a Comment