கீரைகளும் அதன் பலன்களும் - 12 முருங்கை கீரை
கீரைகளும் அதன் பலன்களும் - 12 முருங்கை கீரை முருங்கையின் இலை, பூ, காய், விதை, வேர், பட்டை ஆகிய எல்லா பாகங்களும் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை உடையது. முருங்கை, நொறுங்கத் தின்றால் 3000 வராது என்பது பழமொழி. இதன் அர்த்தம் நாம் உண்ணும் உணவுப் பொருட்களை நன்றாக மென்று நொறுங்கத் தின்றாலும், முருங்கைக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தாலும் 3000 நோய்கள் வராது என்பது உண்மையாகும். முருங்கை கீரை பல்வேறு நோய்களை வராமல் தடுக்கக்கூடியது, மற்றும் பலவகையான நோய்களை குணப்படுத்தக்கூடிய மருந்தாகவும் செயல்படுகிறது. முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ,பி,சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன. முருங்கை இலையின் உடைய பொடியானது மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகப் பெரிய அளவில் உதவுகின்றது. மறதிநோய் எனப்...