Tuesday, 15 November 2022

கீரைகளும் அதன் பலன்களும் - 12 முருங்கை கீரை

 கீரைகளும் அதன் பலன்களும் - 12

                    முருங்கை கீரை 




    முருங்கையின் இலை, பூ, காய், விதை, வேர், பட்டை ஆகிய எல்லா பாகங்களும் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை உடையது. முருங்கை, நொறுங்கத் தின்றால் 3000 வராது என்பது பழமொழி. இதன் அர்த்தம் நாம் உண்ணும் உணவுப் பொருட்களை நன்றாக மென்று நொறுங்கத் தின்றாலும், முருங்கைக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தாலும் 3000 நோய்கள் வராது என்பது உண்மையாகும்.

     முருங்கை கீரை பல்வேறு நோய்களை வராமல் தடுக்கக்கூடியது, மற்றும் பலவகையான நோய்களை குணப்படுத்தக்கூடிய மருந்தாகவும் செயல்படுகிறது.

     முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ,பி,சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன.

     முருங்கை இலையின் உடைய பொடியானது மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகப் பெரிய அளவில் உதவுகின்றது. மறதிநோய் எனப்படும் அல்சீமர் நோயை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது, மேலும் மன வளம். ஞாபக சக்தி ஆகியவற்றை பாதுகாக்க உதவுகிறது.

     ஆஸ்துமா மார்சளி சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை ரசம் அல்லது சூப் மிகவும் நல்ல பலன் தரும்.

     முருங்கை இலை ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது, இரத்தத்தை சுத்தி செய்து எலும்புகளை வலுப்படுத்தும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும்.

    சருமத்தில் உண்டாகும் தொற்றுகள், பாக்டீரியாவால் உண்டாகும் பிரச்சினைகளில் இருந்து காப்பாற்ற உதவுகிறது. முருங்கைக்கீரை சிறுநீர் பாதையில் ஏற்படுகின்ற தொற்றுக்களை போக்கவும் உதவுகிறது.

    முருங்கை  கீரையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட பித்த மயக்கம், மலச்சிக்கல், வயிறு  மந்தம் போன்றவை குணமாகும். ரத்தசோகை உள்ளவர்கள் முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிட ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து இரத்த சோகையை குறைக்க உதவும்.

     முடி நீளமாக வளர்வதற்கும், நரைமுடி குறைவதற்கும் முருங்கைக்கீரை உதவுகிறது. வயிற்றுப்புண் வாய்ப்புண்  குறைப்பதற்கு பயன்படுகிறது.

     முருங்கை இலையுடன் மிளகு சேர்த்து ரசம் செய்து சாப்பிட கைகால் மற்றும் உடல் வலி நீங்கும்

No comments:

Post a Comment

நீரிழிவு மேலாண்மைக்கான சிறந்த இந்திய உணவுகள்

நீரிழிவு மேலாண்மைக்கான சிறந்த இந்திய உணவுகள்       நீரிழிவு நோயை நிர்வகிப்பது பெரும்பாலும் அதிக மனஅழுத்தத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக முரண்ப...