Posts

Showing posts with the label Green leafy vegetables

Embracing Seasonal Bounty: Cooking with March's Produce for Women's Health in India

Image
Enjoying Seasonal Bounty: Cooking with March Produce for Women's Health in India.            As March arrives, it comes an abundance of fresh seasonal produce that not only tantalizes the taste buds but also provides numerous health advantages. In India, whose culinary traditions are inextricably linked to the changing seasons, embracing local and seasonal products is critical to feeding the body and promoting general well-being, particularly for women. In this post, we will look at the seasonal produce of March in India and how it might enhance women's health. Seasonal Produce of March in India:      In many parts of India, March marks the transition from winter to spring, bringing out a wide variety of fruits, vegetables, and herbs. Some of the seasonal vegetables available during this period are: Palak :      Spinach is a nutritional powerhouse that promotes several elements of women's health. It contains iron, vitam...

கீரைகளும் அதன் பலன்களும் - 13 - காசினிக்கீரை

Image
  கீரைகளும் அதன் பலன்களும் - 13                               காசினிக்கீரை           காசினிக்கீரை இந்தியாவில் குளிர்ச்சியான மலைப்பிரதேசங்களான கொடைக்கானல், ஏற்காடு, சேர்வராயன் மலைப்பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் கொம்பு காசினி, சீமைக்காசினி, வேர்காசினி, சாலட் காசினி ஆகிய இரகங்கள் உள்ளன. ஜூலை மாதத்தில் பயிரிடப்பட்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது. பயன்கள்  காசினிக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ, பி, சி  ஆகிய சத்துக்கள் உள்ளன. காசினிக் கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி உடலை சீராக வைக்க உதவும். காசினிக் கீரை சூப் உடல் எடையை குறைக்க உதவும். காசினிக் கீரையை நிழலில் உலர்த்தி போடி செய்து தினமும் காலை வேளையில் ஒரு குவளை வெந்நீரில் 1 டீஸ்பூன் கலந்து அருந்தி வர நீரிழிவு நோய் கட்டுப்படும். காசினிக் கீரை இரத்தத்தை சுத்திகரித்து நோய் எத...

கீரைகளும் அதன் பலன்களும் - 12 முருங்கை கீரை

Image
  கீரைகளும் அதன் பலன்களும் - 12                          முருங்கை கீரை       முருங்கையின் இலை, பூ, காய், விதை, வேர், பட்டை ஆகிய எல்லா பாகங்களும் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை உடையது. முருங்கை, நொறுங்கத் தின்றால் 3000 வராது என்பது பழமொழி. இதன் அர்த்தம் நாம் உண்ணும் உணவுப் பொருட்களை நன்றாக மென்று நொறுங்கத் தின்றாலும், முருங்கைக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தாலும் 3000 நோய்கள் வராது என்பது உண்மையாகும்.       முருங்கை கீரை பல்வேறு நோய்களை வராமல் தடுக்கக்கூடியது, மற்றும் பலவகையான நோய்களை குணப்படுத்தக்கூடிய மருந்தாகவும் செயல்படுகிறது.       முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ,பி,சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன.       முருங்கை இலையின் உடைய பொடியானது மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகப் பெரிய அளவில் உதவுகின்றது. மறதிநோய் எனப்...

கீரைகளும் அதன் பலன்களும் - 11 - முளைக்கீரை

Image
  கீரைகளும் அதன் பலன்களும் - 11                               முளைக்கீரை           முளைக்கீரை அதிகம் உண்ணப்படும் கீரை வகைகளில் ஒன்றாகும். மத்திய கிழக்கு ஆசியாவை பூர்விகமாக கொண்டஇந்த  கீரை இன்று உலகின் பல பாகங்களிலும் பயிரிடப்படுகிறது. தமிழர்களின் சமையலில் முக்கிய இடம் வகிக்கிறது . முளைக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்  மூளை வளர்ச்சி       முளைக்கீரையில் உள்ள இரும்புச்சத்து, தாமிரச்சத்து மற்றும் மணிச்சத்து மனிதர்களின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. வளரும்  பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு அதிகம் கொடுப்பது நல்லது. காய்ச்சல்      முளைக்கீரையுடன், சீரகத்தை சேர்த்து, மிளகாய் வற்றலை கிள்ளி போட்டு நெய் சேர்த்து வறுத்து , பின் தண்ணீர் ஊற்றி அவித்து அந்த சாற்றை வடித்து சோறுடன் கலந்து சாப்பிட்டால் காய்ச்சல் எளிதில் குணமாகும். மூலம்       முளைக்கீரை,துத்திக்கீரை இரண்டையும் சம அளவு சேர்த்து அதனுடன...

கீரைகளும் அதன் பலன்களும் - 10 - சிறு கீரை

Image
கீரைகளும் அதன் பலன்களும் - 10 சிறு கீரை       சிறு கீரை ஒரு மருத்துவ குணங்களை கொண்ட கீரை வகையாகும். சிறு கீரையை நம் உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும். சிறு கீரையை பொரியல், கூட்டு , குழம்பு, அல்லது சாதமாக சமைத்து சாப்பிடலாம். சிறு கீரையை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பார்ப்போம். மலச்சிக்கல்      சிறுகீரை அதிக நார்ச்சத்து உடையது. இதனால் நாம் உண்ணும் உணவு எளிதில் செரிமானமாக உதவுகிறது. தீவிர மூலம், மலச்சிக்கல் பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. சிறுநீரகங்கள்      சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை மற்றும் அதை சார்ந்த உறுப்புகள் சிறப்பாக செயல்பட சிறுகீரை உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் உதவுகிறது. வாரம்  ஒருமுறை சிறுகீரையை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்படும். கல்லீரல்           வாரத்திற்கு இரண்டு முறை சிறு கீரையை சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுக்கள் நீங்கி கல்லீரல் வீக்கம் குணமாகும். ஊட்டச்சத்து          ...

கீரைகளும் அதன் பலன்களும் - 9 - அரைக்கீரை

Image
  கீரைகளும் அதன் பலன்களும் - 9                               அரைக்கீரை       நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ள சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியமாகும். அதில் முக்கியமானதாக இருக்கிறது கீரை வகைகள். அந்த கீரை வகைகளில் ஒன்றான அரைக் கீரையின் பயன்களை காண்போம்.       உடலுக்கு தேவையான வைட்டமின், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இதர தாதுஉப்புக்கள் அதிகமாக உள்ளன.      அரைக்கீரை வளரும் குழந்தைகள், இளம் பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கு உகந்தது. அரைக்கீரை பலவிதமான மருத்துவ குணங்கள் கொண்ட கீரையாகும்.       இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. தொற்று நோய்கள் உடலை தாக்காதவாறு காக்கிறது. சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.       காலை உணவுகளை தவிர்ப்பதாலும், நேரம் கடந்து சாப்பிடுவதாலும், ...

கீரைகளும் அதன் பலன்களும் - 7 அகத்திக்கீரை

Image
 கீரைகளும் அதன் பலன்களும் - 7 அகத்திக்கீரை         அகத்திக்கீரை கசப்பு சுவை மிக்க ஒரு கீரை வகையாகும் உடல் ஆரோக்கியத்திற்கு அறுசுவையில் கசப்பு சுவையையும்  கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அகத்திக்கீரையில்  இரண்டு வகைகள் உண்டு.  வெள்ளைப் பூக்களை கொண்ட அகத்தி,  சிவப்பு நிற பூக்களை கொண்ட அகத்தியும்  ஆகும்.  அகத்தை சீராக வைத்திருக்க உதவுவவதாலும்,  அகத்தில் இருக்கும் தீயை தனிப்பதாலும் இவை அகத்தி என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. இவை உணவாக மட்டுமல்லாமல் உடலுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. அகத்திக் கீரையின் இலை, பூ, பட்டை, வேர் என  அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டது.       புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் நிறைந்தது. சித்த மருத்துவ மருந்தை உட்கொள்ளும் பொழுது அகத்திக்கீரையை சாப்பிடக் கூடாது. மற்றபடி அனைவரும் சாப்பிடலாம். மாதம் இருமுறை மட்டுமே எடுத்துக்கொண்டால் பலன் தரும். அதிகம் எடுத்துக் கொண்டால் உடலுக்கு கேடு தரும்.    ...