Tuesday 18 October 2022

கீரைகளும் அதன் பலன்களும் - 9 - அரைக்கீரை

 கீரைகளும் அதன் பலன்களும் - 9

                        அரைக்கீரை 



    நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ள சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியமாகும். அதில் முக்கியமானதாக இருக்கிறது கீரை வகைகள். அந்த கீரை வகைகளில் ஒன்றான அரைக் கீரையின் பயன்களை காண்போம்.

     உடலுக்கு தேவையான வைட்டமின், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இதர தாதுஉப்புக்கள் அதிகமாக உள்ளன.

     அரைக்கீரை வளரும் குழந்தைகள், இளம் பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கு உகந்தது. அரைக்கீரை பலவிதமான மருத்துவ குணங்கள் கொண்ட கீரையாகும்.

     இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. தொற்று நோய்கள் உடலை தாக்காதவாறு காக்கிறது. சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

     காலை உணவுகளை தவிர்ப்பதாலும், நேரம் கடந்து சாப்பிடுவதாலும், அதிகம் காரம் உள்ள உணவுகளை உண்பதாலும் வயிற்றில் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்பட்டு உணவு செரிமானம் ஆவதில் பிரச்சனை ஏற்படுகிறது. அரைக்கீரையை  குழம்பு, கூட்டு என்று செய்து சாப்பிடும்போது குடல் புண்களை ஆற்றுகிறது. கடுமையான மலச்சிக்கலை நீக்கி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

      காய்ச்சலால்  அடிக்கடி அவதிப்படுபவர்களுக்கு உடல் சூடு அதிகமாகி பலவீனத்தை ஏற்படுத்தும். உடலுக்கு பலம் திரும்பப்பெற அரைக் கீரையை அடிக்கடி  சாப்பிட்டு வருவது நலம் பயக்கும்.

    கல்லீரல் பாதிப்பு கொண்டவர்கள் அரைக்கீரையை அடிக்கடி சாப்பிட கல்லீரல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும்.

     சிறுநீரக கற்களை கரைப்பதற்கும், உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீரை வெளியேற்றவும் உதவுகிறது.

     கருத்தரிக்க முடியாத பெண்கள் தங்கள் உணவில்  வாரம் இரண்டு முறை அரைக் கீரையை சாப்பிட்டு வந்தால் அவர்களின் கருப்பை பலம் பெற்று, கருப்பையில் உள்ள நச்சுக்கள் வெளியேறி அப்பெண்கள் கருத்தரிக்கும் நிலையை உண்டாக்கும்.

     அரைக்கீரையை சாப்பிட வயிற்றில் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைகிறது. புற்றுநோய் இருப்பவர்களும் அரைக்கீரையை அதிகம் சாப்பிட புற்றுநோயை எதிர்த்து போராட முடியும்.

      பூச்சிகளின் நச்சை முறிக்கும் திறன் அரைக்கீரை அதிகம் பெற்றுள்ளது

     மன அழுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட இனப்பெருக்க நரம்புகளை சரிசெய்து ஆண்மை குறைவை நீக்குவதற்கு அரைக்கீரை பயன்படுகிறது.

     ஆரம்ப நிலையிலுள்ள மன நோயை குணப்படுத்தும். வாத நோய் உள்ளவர்கள் அரைக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாதநோய் குறையும்.

     அரைக்கீரையை தினமும் உண்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும். இதயம் வலிமை பெறும். குடல் சுத்தமாக இருக்கும்.

     அரைக் கீரையை தொடர்ந்து சாப்பிட நுரையீரல் நோய்கள் நீங்கும். வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சரிசெய்யும். நரம்புகளை வலுப்படுத்தும்.

No comments:

Post a Comment

Celebrating International Yoga Day: The Synergy of Yoga and Nutrition

Celebrating International Yoga Day: The Synergy of Yoga and Nutrition  The Origin of International Yoga Day      Every year on June 21, peop...