Thursday, 6 October 2022

கீரைகளும் அதன் பலன்களும் - 7 அகத்திக்கீரை

 கீரைகளும் அதன் பலன்களும் - 7

அகத்திக்கீரை 



     அகத்திக்கீரை கசப்பு சுவை மிக்க ஒரு கீரை வகையாகும் உடல் ஆரோக்கியத்திற்கு அறுசுவையில் கசப்பு சுவையையும்  கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அகத்திக்கீரையில்  இரண்டு வகைகள் உண்டு.  வெள்ளைப் பூக்களை கொண்ட அகத்தி,  சிவப்பு நிற பூக்களை கொண்ட அகத்தியும்  ஆகும்.  அகத்தை சீராக வைத்திருக்க உதவுவவதாலும்,  அகத்தில் இருக்கும் தீயை தனிப்பதாலும் இவை அகத்தி என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. இவை உணவாக மட்டுமல்லாமல் உடலுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. அகத்திக் கீரையின் இலை, பூ, பட்டை, வேர் என  அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டது.

     புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் நிறைந்தது. சித்த மருத்துவ மருந்தை உட்கொள்ளும் பொழுது அகத்திக்கீரையை சாப்பிடக் கூடாது. மற்றபடி அனைவரும் சாப்பிடலாம். மாதம் இருமுறை மட்டுமே எடுத்துக்கொண்டால் பலன் தரும். அதிகம் எடுத்துக் கொண்டால் உடலுக்கு கேடு தரும்.

     நுரையீரலில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய பயன்படுகிறது. சுவாசிக்கும் பொழுது காற்றில் இருக்கும் நச்சுக்கள் மூச்சுக்குழாயில் தங்கி நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த நச்சுக்களை வெளியேற்ற அகத்திக் கீரையை பருப்பு, தேங்காய் சேர்த்து தேங்காய் எண்ணெயில்  பொரியல் செய்து சாப்பிட நுரையீரலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறும்.

     உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடலின் உட் சுவரிலிருந்து  புண்களை ஆற்றும் வல்லமை கொண்டது அகத்திக்கீரை.  மலத்தை இளக்கி வெளியேற்றும்.

     சிறுநீர்க் கடுப்பு பிரச்சனையையும் சரிசெய்யும்.  அதிக உடல் வெப்பத்தால் உண்டாகும் வயிற்றுப் புண்களை ஆற்றும். அகத்திக் கீரையைக் காம்பு நீக்கி அதனுடன்  சிறிய வெங்காயம் மற்றும் மிளகு சேர்த்து மசியல் செய்து சாப்பிட்டால் வயிற்றுப் புண் குணமாகும்.

    விரத நாட்களில்  விரதத்தை முடிக்கும் பொழுது அகத்திக்கீரையை சாப்பிடுவதால் உடல் சோர்வை நீக்கி அதிக பலத்தை கொடுக்கும்.  உடல் உறுப்புகளை சீராக செயல்பட வைத்து ரத்த ஓட்டத்தை சீராக்கவும் பயன்படுகிறது.

     சைனஸ் பிரச்சனையால் தலையில் நீர் கோர்த்து தலைவலி ஏற்படும். அதனை சரிசெய்ய அகத்திக்கீரை பயன்படுகிறது.

     அகத்திகீரை சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல் மற்றும் இதய நோய் அனைத்தையும் தடுக்கும் வல்லமை உடையது.

     அகத்திக் கீரையில் உள்ள சுண்ணாம்பு சத்து பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. அகத்திக்கீரை அரிப்பு சொறிசிரங்கு முதலிய தோல் நோய்களை குணப்படுத்தும்.  கருவளையங்கள்  நிறைந்த முகத்திற்கு ஒரு நல்ல தீர்வாக அகத்திக்கீரை செயல்படுகிறது.

      அகத்திக் கீரையின் சாறு உடலில் வெப்பத்தை குறைக்கவும், ரத்தசோகையை நீக்கவும் பயன்படுகிறது. அகத்திக்கீரை நுண்கிருமிகள் வளர்வதையும், நோய்த்தொற்று ஏற்படுவதையும்  தடுக்கிறது அகத்திக்கீரை வைட்டமின் பி குறைபாட்டினை சரி செய்ய பயன்படுகிறது.



No comments:

Post a Comment

நீரிழிவு மேலாண்மைக்கான சிறந்த இந்திய உணவுகள்

நீரிழிவு மேலாண்மைக்கான சிறந்த இந்திய உணவுகள்       நீரிழிவு நோயை நிர்வகிப்பது பெரும்பாலும் அதிக மனஅழுத்தத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக முரண்ப...