Monday, 31 October 2022

கீரைகளும் அதன் பலன்களும் - 10 - சிறு கீரை

கீரைகளும் அதன் பலன்களும் - 10


சிறு கீரை  






    சிறு கீரை ஒரு மருத்துவ குணங்களை கொண்ட கீரை வகையாகும். சிறு கீரையை நம் உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும். சிறு கீரையை பொரியல், கூட்டு , குழம்பு, அல்லது சாதமாக சமைத்து சாப்பிடலாம். சிறு கீரையை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பார்ப்போம்.


மலச்சிக்கல் 


    சிறுகீரை அதிக நார்ச்சத்து உடையது. இதனால் நாம் உண்ணும் உணவு எளிதில் செரிமானமாக உதவுகிறது. தீவிர மூலம், மலச்சிக்கல் பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது.

சிறுநீரகங்கள் 


    சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை மற்றும் அதை சார்ந்த உறுப்புகள் சிறப்பாக செயல்பட சிறுகீரை உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் உதவுகிறது. வாரம்  ஒருமுறை சிறுகீரையை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்படும்.

கல்லீரல் 


        வாரத்திற்கு இரண்டு முறை சிறு கீரையை சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுக்கள் நீங்கி கல்லீரல் வீக்கம் குணமாகும்.

ஊட்டச்சத்து 

    
        சிறுகீரையில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளது. பொட்டாசியம், மெக்னிசியம் , மாங்கனீசு போன்ற தாது உப்புக்களும் உள்ளன. இவை எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், இரத்த நரம்புகளின் சீரான இயக்கம் ஆகியவற்றுக்கு உதவுகிறது.


செரிமானம் 


        சிறுகீரை செரிமான பிரச்சனைகளை அற்புதமாக குணப்படுத்துகிறது. குடலை சுத்திகரிக்கவும், வயிறு சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கவும் பயன்படுகிறது.

இரத்த சோகை 


    சிறுகீரையை வாரம்  ஒரு முறை சாப்பிட்டு வந்தால் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து இரத்த சோகை குறைபாட்டை நீக்கும்.


மலட்டுத்தன்மை 


        சிறுகீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை பெருகி மலட்டுத்தன்மை நீங்கும்.


கண்கள் 


    சிறுகீரையில் உள்ள வைட்டமின் ஏ கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது, விழிப்படலாம், கருவிழி ஆகியவற்றின் நலத்தையும் மேம்படுத்துகிறது.

புண்கள் 


    உடலில் அடிபடும் பொது ஏற்படும் இரத்த காயங்களை சீக்கிரம் ஆற்றும் தன்மை உடையது சிறுகீரை. காயங்களில் கிருமி தொற்று ஏற்படுவதையும் தடுக்கிறது.


நோய் எதிர்ப்பு 


    சிறு கீரை நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து வெளியிலிருந்து உடலுக்குள் வரும் நோய்  கிருமிகளை எதிர்த்து அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் அண்டாதவாறு காக்கிறது.



        




 






No comments:

Post a Comment

நீரிழிவு மேலாண்மைக்கான சிறந்த இந்திய உணவுகள்

நீரிழிவு மேலாண்மைக்கான சிறந்த இந்திய உணவுகள்       நீரிழிவு நோயை நிர்வகிப்பது பெரும்பாலும் அதிக மனஅழுத்தத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக முரண்ப...