கீரைகளும் அதன் பலன்களும் - 11
முளைக்கீரை
முளைக்கீரை அதிகம் உண்ணப்படும் கீரை வகைகளில் ஒன்றாகும். மத்திய கிழக்கு ஆசியாவை பூர்விகமாக கொண்டஇந்த கீரை இன்று உலகின் பல பாகங்களிலும் பயிரிடப்படுகிறது. தமிழர்களின் சமையலில் முக்கிய இடம் வகிக்கிறது .
முளைக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
மூளை வளர்ச்சி
முளைக்கீரையில் உள்ள இரும்புச்சத்து, தாமிரச்சத்து மற்றும் மணிச்சத்து மனிதர்களின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. வளரும் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு அதிகம் கொடுப்பது நல்லது.
காய்ச்சல்
முளைக்கீரையுடன், சீரகத்தை சேர்த்து, மிளகாய் வற்றலை கிள்ளி போட்டு நெய் சேர்த்து வறுத்து , பின் தண்ணீர் ஊற்றி அவித்து அந்த சாற்றை வடித்து சோறுடன் கலந்து சாப்பிட்டால் காய்ச்சல் எளிதில் குணமாகும்.
மூலம்
முளைக்கீரை,துத்திக்கீரை இரண்டையும் சம அளவு சேர்த்து அதனுடன் சிறு பருப்பை சேர்த்து சமைத்து சாப்பிட உள் மூலம், இரத்த மூலம் ஆகிய நோய்கள் குணமாகும்.
பசியின்மை
பசியின்மை பிரச்சனை இருப்பவர்கள் முளைக்கீரையுடன், மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து சமைத்து சாப்பிட பசியின்மை குறைபாடு தீர்ந்து நல்ல பசி உண்டாகும்.
ருசியின்மை
உடல்நல பாதிப்பால் நாக்கில் உணவின் ருசியை உணரா தன்மை ஏற்படும். முளைக்கீரையுடன் . புளிச்சக்கீரை, மிளகு, மஞ்சள், உப்பு சேர்த்து சமைத்து சாப்பிட நாக்கில் ஏற்படும் ருசி அறிய முடியாத குறைபாடு நீங்கும்.
ஊட்டச்சத்து
முளைக்கீரையை தொடர்ந்து சாப்பிட உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். குழந்தைகளின் உயர வளர்ச்சிக்கு உதவும்.
பித்தம்
முளைக்கீரையை சீரகத்துடன் சேர்த்து ஊறவைத்து பின் செய்து தினமும் சாப்பிட பித்த குறைபாட்டால் ஏற்படும் மயக்கம் மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்கும்
வயிற்றுப்புண்கள்
முளைக்கீரையுடன் சிறு பருப்பை சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் குடல்களில் ஏற்பட்டிருக்கும் புண்கள் விரைவில் குணமாகும்.
No comments:
Post a Comment