Tuesday, 22 November 2022

கீரைகளும் அதன் பலன்களும் - 13 - காசினிக்கீரை

 கீரைகளும் அதன் பலன்களும் - 13

                        காசினிக்கீரை 

    

    காசினிக்கீரை இந்தியாவில் குளிர்ச்சியான மலைப்பிரதேசங்களான கொடைக்கானல், ஏற்காடு, சேர்வராயன் மலைப்பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் கொம்பு காசினி, சீமைக்காசினி, வேர்காசினி, சாலட் காசினி ஆகிய இரகங்கள் உள்ளன. ஜூலை மாதத்தில் பயிரிடப்பட்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

பயன்கள் 

  • காசினிக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ, பி, சி  ஆகிய சத்துக்கள் உள்ளன.
  • காசினிக் கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி உடலை சீராக வைக்க உதவும்.
  • காசினிக் கீரை சூப் உடல் எடையை குறைக்க உதவும்.
  • காசினிக் கீரையை நிழலில் உலர்த்தி போடி செய்து தினமும் காலை வேளையில் ஒரு குவளை வெந்நீரில் 1 டீஸ்பூன் கலந்து அருந்தி வர நீரிழிவு நோய் கட்டுப்படும்.
  • காசினிக் கீரை இரத்தத்தை சுத்திகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • உடல் வீக்கத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது 
  • பற்களுக்கு வலிமையையும், பல் நோய்களை குணமாகும் தண்மை கொண்டது 
  • காசினிக்கீரை பொடியை தினமும் தேன் கலந்து சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல் குணமாகும்.
  • காசினிக்கீரையை புண்ணின் மேல் அரைத்து பற்று போட புண்கள் விரைவில் ஆறும்.

    காசினிக்கீரையை சூப், பொரியல், கூட்டு, குழம்பு அல்லது தேநீராகவும் அருந்தலாம்.




No comments:

Post a Comment

நீரிழிவு மேலாண்மைக்கான சிறந்த இந்திய உணவுகள்

நீரிழிவு மேலாண்மைக்கான சிறந்த இந்திய உணவுகள்       நீரிழிவு நோயை நிர்வகிப்பது பெரும்பாலும் அதிக மனஅழுத்தத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக முரண்ப...