கீரைகளும் அதன் பலன்களும் - 6 தூதுவளை கீரை
கீரைகளும் அதன் பலன்களும் - 6 தூதுவளை கீரை தாவரங்களில் மருந்தாக பயன்படும் கீரை வகைகளில் ஒன்று தூதுவளை. இது ஒரு கொடி வகையாகும். தனது மெல்லிய தண்டு மற்றும் இலைகளில் சிறுசிறு முட்களை பெற்றிருக்கும். சுரம், சளி, இருமல் போன்ற கப நோய்களில் குணப்படுத்த தூது செல்லும் இந்த தூதுவளை. தூதுவளையை வைத்து சட்னி, ரசம், துவையல், அடை செய்து சாப்பிடலாம், தூதுவளை காய்களை காய வைத்து வற்றலாக பயன்படுத்தலாம். தூதுவளை இலைகளை லேகியமாக செய்து சாப்பிடலாம். தூதுவளை எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டது. புற்றுநோய் மற்றும் கல்லீரல் நோய்களில் தூதுவளையின் செயல்பாடுகளை குறித்து ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. காச நோய் மருந்துகளுடன் தூதுவளையை சேர்த்து சாப்பிட நோயின் தீவிரம் குறையும். குளிர்காலத்தி குடிக்கும் நீரில் தூதுவளை இலைகளை போட்டு காய்ச்சி பருக குளிரினால் ஏற்படும் காது நோய்கள் குணமாகும். தூதுவளை இலையின் சாறுடன் மிளகு சேர்த்து குடிக்க சளி, இருமல், மற்றும் செரிமான கோளாறுகள் குணமாகும். இரைப்பு நோயின் தீவிரத்தை குறைக்க தூதுவளை பயன்படுகிற...