Tuesday, 27 September 2022

கீரைகளும் அதன் பலன்களும் - 6 தூதுவளை கீரை

கீரைகளும் அதன் பலன்களும் - 6

தூதுவளை கீரை  

    
        தாவரங்களில் மருந்தாக பயன்படும் கீரை வகைகளில் ஒன்று தூதுவளை. இது ஒரு கொடி வகையாகும். தனது மெல்லிய தண்டு மற்றும் இலைகளில் சிறுசிறு முட்களை பெற்றிருக்கும். சுரம், சளி, இருமல் போன்ற கப நோய்களில் குணப்படுத்த தூது செல்லும் இந்த தூதுவளை. 

    தூதுவளையை வைத்து சட்னி, ரசம், துவையல், அடை செய்து சாப்பிடலாம், தூதுவளை காய்களை காய வைத்து வற்றலாக பயன்படுத்தலாம். தூதுவளை இலைகளை லேகியமாக செய்து சாப்பிடலாம். 


தூதுவளை எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டது.

புற்றுநோய் மற்றும் கல்லீரல் நோய்களில் தூதுவளையின் செயல்பாடுகளை குறித்து ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. காச நோய் மருந்துகளுடன் தூதுவளையை சேர்த்து சாப்பிட நோயின் தீவிரம் குறையும்.

குளிர்காலத்தி குடிக்கும் நீரில் தூதுவளை இலைகளை போட்டு காய்ச்சி பருக குளிரினால் ஏற்படும் காது நோய்கள் குணமாகும்.

தூதுவளை இலையின் சாறுடன் மிளகு சேர்த்து குடிக்க சளி, இருமல், மற்றும் செரிமான கோளாறுகள் குணமாகும்.

இரைப்பு நோயின் தீவிரத்தை குறைக்க தூதுவளை பயன்படுகிறது. குளிர் கால நோய்களில் இருந்து தற்காத்து கொள்ள தூதுவளையை பயன்படுத்தலாம்.

தூதுவளை இலையை  நெய்யில் வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் உடல் வலிமை ஏற்படும் 

தூதுவளை இலையை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட   எலும்புகள் மற்றும் பற்கள் பலப்படும்.

தூதுவளையை நன்கு அரைத்து அடை செய்து சாப்பிட தலையில் உள்ள கபம் குறையும். ஆண்மை குறையை தடுக்கும்.

தூதுவளை தொண்டைப்புற்று, கருப்பைவாய் புற்றுநோய் வராமல் காக்கும்.

தூதுவளை இலையை காயவைத்து பொடி செய்து காலை, மாலை  மிதமான சூட்டில் இருக்கும் நீரில் கலந்து பருக நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும்.


பித்தநீர் அதிகரிப்பால் கண்களில் நீர் சுரத்தல் உண்டாகும். இதற்கு சிறந்த மருந்தாக தூதுவளை உள்ளது.

தூதுவளை இலையை சாறு பிழிந்து தேனுடன் அருந்த ஆஸ்துமா கட்டுப்படும்.

வயிறு மந்தம், வயிற்று கோளாறுகள், அதிக வாயுப்பிரச்னையால் அவதிப்படுபவர்கள் தினமும் வெந்நீரில் தூதுவளை பொடியை கலந்து குடித்து வந்தால் இவையெல்லாம் குணமாகும்.

நீரிழிவு நோயினால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கும், நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கவும் பயன்படுகிறது. 





No comments:

Post a Comment

நீரிழிவு மேலாண்மைக்கான சிறந்த இந்திய உணவுகள்

நீரிழிவு மேலாண்மைக்கான சிறந்த இந்திய உணவுகள்       நீரிழிவு நோயை நிர்வகிப்பது பெரும்பாலும் அதிக மனஅழுத்தத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக முரண்ப...