Posts

Showing posts with the label Green leafy vegetable

உங்கள் கல்லீரலை நேசிக்கவும்: கல்லீரல் ஆரோக்கியத்திற்கான உணவுகள்

Image
  உங்கள் கல்லீரலை நேசிக்கவும்: கல்லீரல் ஆரோக்கியத்திற்கான உணவுகள்                                                            கல்லீரல் மனித உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும், நச்சு நீக்கம், வளர்சிதை மாற்றம் மற்றும் ஊட்டச்சத்து சேமிப்பு போன்ற பல முக்கிய செயல்களில் பங்காற்றுகிறது. இருப்பினும், சீரற்ற  உணவுப்பழக்கம் , அதிகப்படியான மது அருந்துதல் மற்றும் நிறைய மாத்திரைகளை உட்கொள்ளுதல் போன்றவற்றால் கல்லீரல் பாதிக்கப்படையலாம். ஆனால் சமச்சீரான உணவு மற்றும் சரியான வாழ்க்கை முறை  மூலம் உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இந்த பதிவில், கல்லீரல் ஆரோக்கியத்தை  பாதுகாக்கும் பல உணவுகள் பற்றி பார்ப்போம். கீரை வகைகள் :       முளைக்கீரை, தண்டுக்கீரை, மற்றும்  பரட்டை கீரை   போன்ற கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்வது  கல்லீரலுக்கு தேவையான  குளோரோபில் போன்ற முக்கியமான ஊட்டச்ச...

கீரைகளும் அதன் பலன்களும் - 8 வெந்தயக்கீரை

Image
கீரைகளும் அதன் பலன்களும் - 8  வெந்தயக்கீரை    வெந்தயக்கீரை என்பது மேத்தி  என்று இந்தியாவில் அழைக்கப்படுகிறது. அதன் விதைகள் மற்றும் இலைகள் நிறைய மருத்துவ குணங்கள் வாய்ந்தது. எந்த ஒரு சூழ்நிலைக்கு ஏற்றபடி வளரும் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை செடி வெந்தயக்கீரை ஆகும்  வெந்தயக் கீரையில் இரும்புச்சத்து அதிகமாக காணப்படுவதால் ரத்த சோகையை வராமல் தடுப்பதோடு உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.  வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி, வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி காலை, மாலை குடித்து வர இதய நோய் இருப்பவர்களுக்கு சிறந்த தீர்வு தரும்.   உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் வெந்தயக் கீரையை சாப்பிட்டால் அது உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும்  வெந்தயக் கீரையை  வெண்ணெயில் வதக்கி சாப்பிட்டால்  பித்தத்தினால் வரும் மயக்கம் தெளியும்.  கபம் சளி உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால் விரைவில் குணம் அடையலாம்.  வெந்தயக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் புரதச்சத்து  குறைபாட்டை நீக்கி உடல் வலிமை பெறல...

கீரைகளும் அதன் பலன்களும் - 6 தூதுவளை கீரை

Image
கீரைகளும் அதன் பலன்களும் - 6 தூதுவளை கீரை                 தாவரங்களில் மருந்தாக பயன்படும் கீரை வகைகளில் ஒன்று தூதுவளை. இது ஒரு கொடி வகையாகும். தனது மெல்லிய தண்டு மற்றும் இலைகளில் சிறுசிறு முட்களை பெற்றிருக்கும். சுரம், சளி, இருமல் போன்ற கப நோய்களில் குணப்படுத்த தூது செல்லும் இந்த தூதுவளை.      தூதுவளையை வைத்து சட்னி, ரசம், துவையல், அடை செய்து சாப்பிடலாம், தூதுவளை காய்களை காய வைத்து வற்றலாக பயன்படுத்தலாம். தூதுவளை இலைகளை லேகியமாக செய்து சாப்பிடலாம்.  தூதுவளை எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டது. புற்றுநோய் மற்றும் கல்லீரல் நோய்களில் தூதுவளையின் செயல்பாடுகளை குறித்து ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. காச நோய் மருந்துகளுடன் தூதுவளையை சேர்த்து சாப்பிட நோயின் தீவிரம் குறையும். குளிர்காலத்தி குடிக்கும் நீரில் தூதுவளை இலைகளை போட்டு காய்ச்சி பருக குளிரினால் ஏற்படும் காது நோய்கள் குணமாகும். தூதுவளை இலையின் சாறுடன் மிளகு சேர்த்து குடிக்க சளி, இருமல், மற்றும் செரிமான கோளாறுகள் குணமாகும். இரைப்பு நோயின் தீவிரத்தை குறைக்க தூதுவளை பயன்படுகிற...