Tuesday, 11 October 2022

கீரைகளும் அதன் பலன்களும் - 8 வெந்தயக்கீரை


கீரைகளும் அதன் பலன்களும் - 8 
வெந்தயக்கீரை 





  வெந்தயக்கீரை என்பது மேத்தி  என்று இந்தியாவில் அழைக்கப்படுகிறது. அதன் விதைகள் மற்றும் இலைகள் நிறைய மருத்துவ குணங்கள் வாய்ந்தது. எந்த ஒரு சூழ்நிலைக்கு ஏற்றபடி வளரும் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை செடி வெந்தயக்கீரை ஆகும்

  •  வெந்தயக் கீரையில் இரும்புச்சத்து அதிகமாக காணப்படுவதால் ரத்த சோகையை வராமல் தடுப்பதோடு உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.
  •  வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி, வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி காலை, மாலை குடித்து வர இதய நோய் இருப்பவர்களுக்கு சிறந்த தீர்வு தரும்.  
  • உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் வெந்தயக் கீரையை சாப்பிட்டால் அது உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும் 
  • வெந்தயக் கீரையை  வெண்ணெயில் வதக்கி சாப்பிட்டால்  பித்தத்தினால் வரும் மயக்கம் தெளியும்.
  •  கபம் சளி உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால் விரைவில் குணம் அடையலாம்.
  •  வெந்தயக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் புரதச்சத்து  குறைபாட்டை நீக்கி உடல் வலிமை பெறலாம்.
  • கண்பார்வை குறைவு நோய்கள் இருப்பவர்கள் வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.
  • வெந்தயக் கீரை நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டுவர உதவும்.
  • குடல் புண்களை சரி செய்து அல்சர் நோய் ஏற்படுவதை தடுக்கும். வெந்தயக்கீரை செரிமான சக்தியை செம்மைப்படுத்துகிறது.
  •  வெந்தயக் கீரையை வேக வைத்து சாப்பிடும் போது மலம் கழிக்கும்போது உண்டாகும் எரிச்சலைத் தடுக்கும்.
  •  வெந்தயக் கீரையை தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யுடன் வேகவைத்து சாப்பிட இடுப்பு வலி நீங்கும்.
  •  வெந்தயக்கீரை நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.
  •  வெந்தயக்கீரை இதய தமனிகளில் உள்ள கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
  •  பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளை குறைக்கும்.

No comments:

Post a Comment

Start the Year Right: Building a Healthy Eating Routine in 2025

Start the Year Right  Building a Healthy Eating Routine in 2025      As the clock strikes midnight and a new year begins, it’s the perfect ...