உலக நுரையீரல் தினம் 25 செப்டம்பர், 2023
உலக நுரையீரல் தினம் 25 செப்டம்பர், 2023 உலக நுரையீரல் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 25 ந் தேதி நுரையீரல் நோய்கள் வராமல் தடுக்கவும் நுரையீரல் நோய் மருத்துவத்தை அதிகரிக்கவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் " நுரையீரல் நோய் மருத்துவத்தை எளிதாக அனைவருக்கும் கிடைக்க செய்வோம் " நோய் தொற்றை தடுப்பது ஆரோக்கியமாக நுரையீரலை வைக்க உதவுகிறது. அதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் : 1. நுரையீரல் நோய் வராமல் தடுப்பதற்கான முதன்மையான வழி புகை பிடிக்காமல் இருப்பதே ஆகும். 2. தினமும் உடற்பயிற்சி செய்வது நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 3. காற்று மாசுபாட்டையும், வீட்டின் உள்ளே இருக்கும் மாசுக்களால் ஏற்படும் ஒவ்வாமையை தவிர்க்கவும் 4. கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதன் மூலம் நுரையீரல் நோய் தொற்றை தவிர்க்கலாம். 5. தடுப்பூசிகள் மூலம் நுரையீரல் நோய்களை தவிர்க்கலாம். 6. ஆரோக்கியமான சமச்சீரான உணவை உட்கொள்வதன் மூலம் நுரையீரல் நோய்களை கட்டுப்படுத்தலாம். 7. தேவையான அளவு குடிநீர் அருந்துவது நுரையீரல் ஆரோக்...