உலக நுரையீரல் தினம் 25 செப்டம்பர், 2023
உலக நுரையீரல் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 25 ந் தேதி நுரையீரல் நோய்கள் வராமல் தடுக்கவும் நுரையீரல் நோய் மருத்துவத்தை அதிகரிக்கவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள்
" நுரையீரல் நோய் மருத்துவத்தை எளிதாக அனைவருக்கும் கிடைக்க செய்வோம் "
நோய் தொற்றை தடுப்பது ஆரோக்கியமாக நுரையீரலை வைக்க உதவுகிறது. அதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் :
1. நுரையீரல் நோய் வராமல் தடுப்பதற்கான முதன்மையான வழி புகை பிடிக்காமல் இருப்பதே ஆகும்.
2. தினமும் உடற்பயிற்சி செய்வது நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
3. காற்று மாசுபாட்டையும், வீட்டின் உள்ளே இருக்கும் மாசுக்களால் ஏற்படும் ஒவ்வாமையை தவிர்க்கவும்
4. கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதன் மூலம் நுரையீரல் நோய் தொற்றை தவிர்க்கலாம்.
5. தடுப்பூசிகள் மூலம் நுரையீரல் நோய்களை தவிர்க்கலாம்.
6. ஆரோக்கியமான சமச்சீரான உணவை உட்கொள்வதன் மூலம் நுரையீரல் நோய்களை கட்டுப்படுத்தலாம்.
7. தேவையான அளவு குடிநீர் அருந்துவது நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
8. உடல் எடையை சீராக பராமரிக்கவும்
நுரையீரல் நலம் காக்கும் உணவுகள்
1. புரதச்சத்து நிறைந்த உணவுகள் நுரையீரல் சதைகளை பலப்படுத்துகிறது.
2, கொழுப்புச்சத்து நிறைந்த மீன்கள், கொட்டைகள் மற்றும் விதைகள் நுரையீரலில் வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது
3. பொட்டாசியம் நிறைந்த உணவுகளான வாழைப்பழம் போன்றவை நுரையீரலில் நீர் கோர்ப்பதை தடுக்கிறது.
4. பீட்ரூட், கீரை வகைகள், தக்காளி, ஆப்பிள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகள் நுரையீரலில் வீக்கத்தை கட்டுப்படுத்தி, ஆக்சிஜென் உட்கொள்ளலை அதிகரிக்கிறது.
"ஆரோக்கியமான நுரையீரல்கள் நம் உயிர் மூச்சு, நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டிய பரிசு. இந்த உலக நுரையீரல் தினத்தில், எளிதாக சுவாசிக்கவும், நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஒவ்வொரு சுவாசமும் கணக்கிடப்படும் உலகத்தை உருவாக்க ஒன்றிணைவோம்."
No comments:
Post a Comment