உணவை பற்றிய நம்பிக்கைகளும், உண்மைகளும்
உணவை பற்றியும், சில பழக்க வழக்கங்கள் பற்றியும் நிறைய நம்பிக்கைகள் உண்டு ஆனால் அதன் உண்மை தன்மை மாறுபட்டதாக இருக்கும். அப்படி நம்பப்படும் சிலவற்றை பார்ப்போம்.
1. விரைவாக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நம் இழப்பது உடலில் உள்ள நீரின் எடை இழப்பே ! - இந்த கூற்று முற்றிலும் உண்மை. விரைவாக எடையை குறைக்க முற்படும்பொழுது நாம் சரிவிகித உணவை உட்கொள்வதில்லை. எனவே உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு கொழுப்பு குறைவதற்கு பதிலாக நீர் இழப்பும், தசை அளவு இழப்பும் ஏற்படுகிறது.
2. தசை கொழுப்பை விட அதிக எடையை கொண்டு இருக்கும் - இது உண்மை கிடையாது. தசையும் கொழுப்பும் ஒரே அளவு எடை கொண்டது. ஆனால் அவை அடர்த்தியில் வேறுபடும். எனவே அவை உடலில் வெவ்வேறு இடத்தை அடைத்து கொள்ளும். கொழுப்பு உடலின் பாகங்களை காக்கும், தசை வளர்சதை மாற்றத்தை ஏற்படுத்தும்.
3. ஆரோக்கியமான உணவுகள் விலை அதிகமானவை - இந்த கூற்று உண்மையில்லை. ஆரோக்கியமான உணவுகள் எல்லா விலைகளிலும் உள்ளன. வைட்டமின் - சி சத்து கிடைப்பதற்கு நெல்லிக்காய், சாத்துக்குடி, ஆரஞ்சு, நார்த்தங்காய் போன்றவற்றை உண்ணலாம். இவை எளிதில் கிடைக்க கூடியவை மற்றும் விலை குறைந்தவை.
கால நிலைக்கேற்ற காய்கறிகள் மற்றும் பழங்கள் எடுத்து கொள்வது ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும். புரதச்சத்து கிடைக்க பருப்பு வகைகள், கடலை வகைகள், முட்டை ஆகியவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
4. உணவு உண்ணாமல் இருந்தால் எடை குறையும் - இந்த கூற்று தவறானது. நேரத்திற்க்கு உணவு எடுக்காமல் இருப்பது அயர்ச்சியை உண்டாகும். உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். இப்படி இருப்பது நம்மை அதிக சர்க்கரை மற்றும் கலோரி உள்ள உணவுகளை உண்பதற்கு தூண்டும். அவை மீண்டும் எடை ஏற்றத்திற்கு வழி வகுக்கும்.
5. அளவுக்கு அதிகமாக நீர் அருந்துவது எடை குறைப்பை ஏற்படுத்தும்- இந்த கூற்று தவறானது. நீர் அருந்துவதால் உடலில் நீர்ச்சத்து சமமாக இருக்கும். அது நம்மை சுறுசுறுப்பாக இருக்க உதவும். இனிப்பு அல்லது ஏதேனும் பானம் அருந்தினால் நன்றாக இருக்கும் என்று தோன்றினால் அது தாகத்தின் அறிகுறி. அதை தணிக்க நீர் தேவையான அளவு அருந்துவதே சால சிறந்தது.
No comments:
Post a Comment