கீரைகளும் அதன் பலன்களும்
மூக்கிரட்டை
நம் உடலிற்கு தேவையான ஊட்டச்சத்தை பெற கீரைகளை உணவில் சேர்த்து கொள்வதே சிறந்த வழியாகும். கீரைகள் பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்களை உள்ளடிக்கியது. கீரைகளில் பல வகைகள் உண்டு. அவற்றில் ஓன்று தான் மூக்கிரட்டை.
எதன் மீதும் பற்றிப் படராமல், நிலத்தில் படர்ந்து, தனித் தன்மையுடன் வளரும் ஒரு செடிதான், மூக்கிரட்டை. அடர் நீல வண்ணத்திலும், வெண்மை வண்ணத்திலும் பூக்கும் மலர்களைக் கொண்ட இருவேறு விதமான மூக்கிரட்டை செடிகளின் இலைகள் பசுமை வண்ணத்தில், தண்டுகளில் தனித்தனியே காணப்படும். சாரணைக் கொடி, சாரணத்தி என்றும் அழைக்கப்படும் மூக்கிரட்டை, அரிய தன்மைகள் உடைய ஒரு நற்செடியாகும். உடலுக்கு வியாதி எதிர்ப்பு சக்தி அளித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் மிக்க இதன் இலைகளில், பத்துக்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை மிகுந்துள்ளன.
1. மூக்கிரட்டை சாப்பிடுவதால் கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றில் உள்ள நச்சு கழிவுகள் உடலில் இருந்து வெளியேற்றப்படும்.
2. வாத நோய்களை கட்டுப்படுத்தும்
3. மஞ்சள் காமாலை, கல்லீரல் நோய் இருப்பவர்கள் மூக்கிரட்டையை உட்கொள்ள நச்சு நீரை வெளியேற்றி வயிற்று உப்பிசத்தை குறைக்கும்.
4. தொற்று நோய்களின் பாதிப்பை சரிப்படுத்தும்.
5. சிறுநீர்ப் பாதை தொற்று நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
6. மூளைக்கு ஆற்றலை அளித்து உடலுக்கு சுறுசுறுப்பையும், மனதிற்கு உற்சாகத்தையும் அளிக்கும்.
7. உடல் பருமனை குறைக்க உதவுகிறது
8. சுவாச பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது
9. புற்று நோயை உண்டாகும் நச்சுக்களை அழிக்க உதவும்
10. உடலில் முதுமை தன்மையை குறைத்து இளமையை தக்க வைக்க உதவும்.
11. செரிமான கோளாறுகள், வயிற்று பூச்சிகள் என அனைத்து வயிற்றுப்பிரச்னைகளை சரி செய்ய உதவும்.
12. நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
No comments:
Post a Comment