மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் உணவுகள்
மனித உடலில் உள்ள உறுப்புகளில் மிக சிக்கலானது மூளை . மூளை ஒரு மனிதனின் உடலில் அனைத்து செயல்பாடுகளும் ஒழுங்காக நடைபெற உதவுகிறது . ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் மூளையின் செயல்பாடுகள் குறையத் துவங்கும். அதனால் ஞாபக மறதி, அல்சைமர் போன்ற நோய்கள் உருவாகும். மேலும் நரம்பு தளர்ச்சி, திக்கு வாய், நடையில் மாற்றம், கவனக்குறைபாடு ஆகியவை ஏற்படும். இவை வராமல் தடுக்க பின்வரும் உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
1. பச்சை காய்கறிகள் :
பச்சை காய்கறிகளான கீரை வகைகள், ப்ரோக்கோலி, போன்றவற்றில் வைட்டமின் - கே, லூட்டின், இரும்புச்சத்து, மற்றும் பீட்டா கரோடின் அதிகம் இருப்பதால் அவை மூளையின் செயல்திறன் குறைபாட்டை சரிசெய்ய உதவுகிறது.
2. கொழுப்புச்சத்து நிறைந்த மீன் வகைகள்
கொழுப்புச்சத்து நிறைந்த மீன் வகைகளில் ஒமேகா 3 அதிகமா இருப்பதால் அவை பீட்டா - அமைலாய்டு என்னும் புரதத்தின் அளவை மூலையில் சரியான அளவு இருக்குமாறு செய்து மூளையில் கட்டிகள் உருவாவதை தடுக்கிறது.
3. ஸ்ட்ராவ்பெர்ரி. ப்ளாக்பெர்ரி, ப்ளூபெர்ரி ஆகியவற்றில் உள்ள இயற்கை நிறமிகள் ஞாபக திறனை அதிகரிக்கும்.
4. காபி மற்றும் டீ - இல் உள்ள காபின் (caffeine ) கவனக்குறைபாட்டை சரி செய்ய உதவுகிறது.
5. பாதாம், வால்நட் போன்றவற்றில் மூளைக்கு தேவையான நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளன. இவற்றை தினமும் உட்கொள்வதால் ஞாபகத்திறன் அதிகரிக்கும்.
No comments:
Post a Comment