Tuesday, 20 September 2022

கீரைகளும் அதன் பலன்களும் - 4 கரிசலாங்கண்ணி கீரை

கீரைகளும் அதன் பலன்களும் - 4

கரிசலாங்கண்ணி கீரை  


    கீரைகளின் ராணி என அழைக்கப்படும் கரிசலாங்கண்ணி கீரை மஞ்சள்  மற்றும் வெள்ளை நிறத்தில் உள்ளது. கரிசலாங்கண்ணி உணவுக்கான கீரை  அல்ல. இது அதிக மருத்துவ குணங்களை உள்ளடிக்கியது. அவை 

1. கரிசலாங்கண்ணி இலையின் சாறை சிறு தீயில் இட்டு தைலமாக காய்ச்சி காலையிலும், மாலையிலும்  வந்தால் இருமல் குணமாகும். இந்த தைலத்தை தலைக்கு தேய்த்து ஊற வைத்து குளித்தால் உடல் குளிர்ச்சியாகும், காதுவலி, கண் எரிச்சல் நீங்கும். 

2. கரிசலாங்கண்ணி இலையை அப்படியே இட்டு மென்று சாப்பிட உடலில் இருந்து கழிவுகள் வெளியேறும். இந்த கீரையை பருப்புடன் சேர்த்து கூட்டாக சாப்பிட இரத்தத்தை சுத்தம் செய்து உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.

3. கரிசலாங்கண்ணி கண்களுக்கும், மூளைக்கும் குளிர்ச்சியை அளிக்க கூடியவை. கரிசலாங்கண்ணி இலையின் சாறை தேங்காயெண்ணெய் உடன் சேர்த்து காய்ச்சி அதை தலைக்கு தேய்த்து  கண் பார்வைத்திறன் மேம்படும்.

4. மஞ்சள் காமாலைக்கு பெரும் தீர்வு கரிசலாங்கண்ணி  இலையாகும். கரிசலாங்கண்ணி இலையை மசித்து அதை  கலந்து வடிகட்டி காலை மாலை  என இரு வேளை பருக மஞ்சள் காமாலை குணமாகும்.

5. நெஞ்சு சளி கரைய கரிசலாங்கண்ணி இல்லை உதவும் 

6. கரிசலாங்கண்ணி கீரையை கொண்டு கண் மை தயாரித்து பயன்படுத்த கண் நோய்கள் நீங்கும் 

7. கரிசலாங்கண்ணி இலையை கொண்டு பல் துலக்க பல் நோய்கள் குணமாகும். பற்கள் வெண்மையாகவும் பயன்படுகிறது.

8. கரிசலாங்கண்ணி கீரை இள நரையை குறைக்கும்.

9. மூப்பை தடுத்து தோல் நோய்களை நீக்குகிறது.

10. சுவாசப்பிரச்சனையை போக்குகிறது.


     கரிசலாங்கண்ணியை பருப்புடன் சேர்த்தும், பொரியல் செய்தும், சூப் செய்தும் அன்றாட உணவில் அடிக்கடி பயன்படுத்தி வர உடலுக்கு நல்ல குளிர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் பெறலாம்.


No comments:

Post a Comment

நீரிழிவு மேலாண்மைக்கான சிறந்த இந்திய உணவுகள்

நீரிழிவு மேலாண்மைக்கான சிறந்த இந்திய உணவுகள்       நீரிழிவு நோயை நிர்வகிப்பது பெரும்பாலும் அதிக மனஅழுத்தத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக முரண்ப...