Thursday, 1 September 2022

தேசிய ஊட்டச்சத்து வாரம்

தேசிய ஊட்டச்சத்து   வாரம் 
(1-7) செப்டம்பர், 2022




இந்தியாவில் தேசிய ஊட்டச்சத்து மாதம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் கொண்டப்படுகிறது. அதில் செப்டம்பர் 1 முதல் 7 ம் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் அவசியத்தை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.


    சரிவிகித உணவை எடுத்து கொள்வதன் மூலம் ஆரோக்கியமான நோயற்ற வாழ்வை வாழ முடியும். ஒவ்வொரு வருடமும் ஒரு கருப்பொருளை கொண்டு தேசிய ஊட்டச்சத்து வாரம் கொண்டப்படுகிறது. 

2022 ம் ஆண்டின் கருப்பொருள்

 " சுவைகளின் உலகை கொண்டாடுவோம்" 


    இந்தியாவில் 1982 ம் ஆண்டு முதல் தேசிய ஊட்டச்சத்து மாதம் கொண்டப்படுகிறது.   இந்திய அரசு பலவிதமான செயல்களின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை செய்கிறது. 

    இந்த ஆண்டு தேசிய ஊட்டச்சத்து மாதத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்தின் அவசியத்தை குறித்து விழிப்புணர்வை  ஏற்படுத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் முதல் குறிக்கோள் "ஊட்டச்சத்து குறைபாட்டை" நீக்குவதாகும். ஊட்டச்சத்து குறைபாடு குறைவூட்டலினாலோ அல்லது மிகைவூட்டத்தினாலோ (undernutriton  or  overnutrition ) ஏற்படுகிறது. எல்லா வயதினருக்கும் ஊட்டச்சத்து இன்றியமையாயது. 




No comments:

Post a Comment

நீரிழிவு மேலாண்மைக்கான சிறந்த இந்திய உணவுகள்

நீரிழிவு மேலாண்மைக்கான சிறந்த இந்திய உணவுகள்       நீரிழிவு நோயை நிர்வகிப்பது பெரும்பாலும் அதிக மனஅழுத்தத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக முரண்ப...