மதிய நேரத்தில் ஏற்படும் சோர்வை விரட்டும் வழிகள்
மதிய நேரம் 2 மணி அல்லது 3 மணி போன்ற நேரத்தில் மனிதர்களில் பலர் சோர்வாக உணர்கிறார்கள். வேலையை செய்வதில் மெத்தனம், தூக்கம் வருவது, கவனமின்மை, போன்றவை மதிய நேர சோர்வின் அறிகுறியாகும். நிறைய பேர் ஒரு காபி அல்லது டீ அருந்தியோ அல்லது அதிக இனிப்பான நொறுக்கு தீனிகளை உண்டோ இந்த சோர்வை விரட்ட முயலுகின்றனர். மதிய நேர சோர்வை விரட்டி நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பதற்கான வழிகளை இந்த கட்டூரையில் காண்போம்.
1. சூரிய ஒளி
காலை நேர சூரிய ஒளியில் தினமும் குறைந்தது 10 நிமிடங்கள் நிற்பது நம் உடலில் உள்ள சர்க்கார்டியன் ரிதம் சீராக உதவுகிறது. அதிகாலையில் எழுந்து காலை நடைப்பயிற்சியை மேற்கொள்வது அந்த நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க உதவும்.
தூக்கத்தை மேம்படுத்தும் மெலடோனின் என்ற ஹார்மோன் சூரிய ஒளி நம் உடலில் படும் பொழுது அதனுடைய அளவு குறைந்து, நாளின் இறுதியில் தேவையான அளவு சுரந்து மதிய நேரத்தில் சோர்வை உருவாக்காமல் நல்ல இரவு தூக்கத்தை கொடுக்கும்.
2. புரதம் நிறைந்த காலை உணவு
காலை நேர உணவில் சரியான அளவில் புரதச்சத்து நிறைந்த உணவை சேர்த்து கொள்ளும் பொழுது அதில் உள்ள அமினோ அமிலங்கள் நம் மூளை நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட உதவும். புரதச்சத்து நிறைந்த காலை உணவு மதிய நேரத்தில் ஏற்படும் சர்க்கரை அளவின் மாறுபாட்டை தடுக்கும்.
3. நீரேற்றம்
மதிய நேர சோர்வு சில சமயம் உடலில் நீர்ச்சத்து இல்லாமல் இருப்பதால் ஏற்படலாம். அதிக அளவு காபி, டீ அல்லது குளிர்பானங்கள் அருந்துவது உடலில் நீர்ச்சத்தை வற்ற செய்யும். எனவே நாள் முழுவதும் சீரான இடைவெளியில் நீர் அருந்துவது இரத்த ஓட்டத்தை சீராக வைத்து நாம் சோர்வடையாமல் தடுக்கும்.
4. நல்ல உறக்கம்
இரவில் ஆழ்ந்த உறக்கம் உறங்குவது சர்க்கார்டியன் ரிதத்தை வலுவாக்க உதவி மத்திய நேர சோர்வை தடுக்கிறது. தினமும் குறைந்தது 7 முதல் 8 மணி நேர ஆழ்ந்த உறக்கம் அவசியம். தினமும் ஒரே நேரத்தில் தூங்க செல்வது, காலையில் சீக்கிரமாக எழுவது, உறங்கும் நேரத்தில் கைபேசி, தொலைக்காட்சி போன்றவற்றை பயன்படுத்தாமல் இருப்பது, நல்ல இருட்டான நல்ல உறக்கத்தை தரக்கூடிய சூழலை உருவாக்குவது ஆழ்ந்த உறக்கத்திற்கு வழி வகுக்கும்.
5. ஆரோக்கியமான மதிய உணவு
மதிய உணவு நம் உடலுக்கு சக்தியை அளித்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மேம்படுத்தி, மதிய நேர சோர்வையும், கவனமின்மையையும் சரிபடுத்துகிறது. அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சரிவிகித மதிய உணவை .உண்ண வேண்டும்.
6. உங்கள் வேலைகளை திட்டமிடுங்கள்
ஒரு நாளில் நீங்கள் செய்ய போகும் வேலைகளை திட்டமிடுங்கள். எந்த எந்த வேலைகள் உள்ளன, அதில் எது முக்கியமானது, முதலில் முடிக்க வேண்டியது, கடினமானது என வகைப்படுத்தி அதில் முக்கியமான கடினமான வேலையை காலையில் செய்வதன் மூலம் மதிய நேரத்தில் சோர்வு இல்லாமல் இருக்கலாம். அந்த நேரத்தில் கடினமான வேலைகள் செய்வது சோர்வை
அதிகரிக்கும்.
No comments:
Post a Comment