உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்கும் பழச்சாறு வகைகள் - 4
பாகற்காய், ஆப்பிள், வெள்ளரி பழச்சாறு
தேவையான பொருட்கள்
பாகற்காய் -4
ஆப்பிள் - 50 கிராம்
வெள்ளரிக்காய் - 1 (சிறியது)
எலுமிச்சை பழச்சாறு - சிறிதளவு
துருவிய இஞ்சி - சிறிதளவு
செய்முறை
- பாகற்காயை சீவி விதைகளை நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- ஆப்பிள் விதைகளை நீக்கி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- பாகற்காயை சிறிது நேரம் உப்பு சேர்த்த தண்ணீரில் ஊறவைத்து பின்பு பயன்படுத்தவும்.
- வெள்ளரியின் தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- நறுக்கிய பாகற்காய், ஆப்பிள், வெள்ளரித் துண்டுகளை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் துருவிய இஞ்சி சேர்த்து நன்கு அரைக்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். பின்பு வடிகட்டி தேன் அல்லது கருப்பு உப்பு சேர்த்து அருந்தலாம்.
பாகற்காய் ஆப்பிள் வெள்ளரி பழச்சாற்றில் நன்மைகள்
- பாகற்காய் பழச்சாறு நிறைய ஊட்டச்சத்துக்களை உடையது. குறைந்த கலோரிகளையும், அதிக நார்ச் சத்தும் நிறைந்தது. இந்த பழச்சாற்றில் விட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- மூளைத்திறனை மேம்படுத்துகிறது
- இந்த பழச்சாறு வைட்டமின் ஏ வின் சிறந்த உணவுப் பொருளாகும் அதனால் கண் பார்வையை மேம்படுத்தி, தோல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
- உடலிலுள்ள புண்களை ஆற்ற பயன்படுகிறது.
- நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமான சக்தியை மேம்படுத்தி உடலில் சர்க்கரையின் அளவை சீராக்குகிறது.
- நீரிழிவு நோயை கட்டுப்படுத்த சிறந்த உணவாகும்.
- உடல் எடையை குறைப்பதற்கு பயன்படுகிறது. இந்த பழச்சாறு அதிக நார்ச்சத்து, குறைந்த கேலரி கொண்டது. மற்றும் உடலின் நீர் ஏற்றத்தை மேம்படுத்துகிறது. எனவே பசி உணர்வை மட்டுப்படுத்தி உணவு நேரங்களுக்கு இடையே உண்ணும் நொறுக்குத்தீனி சாப்பிடும் பழக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
- இதில் கேன்சருக்கு எதிரான காரணிகள் உள்ளன.
- பாகற்காய் பழச்சாறு உடலில் கெட்ட கொழுப்புகளை நீக்கி நல்ல கொழுப்பு நல்ல கொழுப்பின் அளவை அதிகப்படுத்த உதவுகிறது.
No comments:
Post a Comment