Tuesday 25 October 2022

முருங்கைப்பூ

முருங்கைப்பூ  





     முருங்கையின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. முருங்கைக் கீரை, முருங்கை காய்,  முருங்கைப்பூ அனைத்துமே உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டத்தையும் அளிக்கக்கூடியது.

முருங்கை பூவின் நன்மைகள் 

     முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை, மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.  40 வயதிற்கு மேல் ஏற்படும் வெள்ளெழுத்து பிரச்சனையை சரி செய்ய   முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வர வேண்டும். வெள்ளெழுத்து மாறும். கண் ஏற்படும் வெண்படலமும் மாறும்.

     மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு. முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

     முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கஷாயம் வைத்து காலை, மாலை அருந்தி வந்தால் பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.

     அதிக வேலைப் பளு, மன அழுத்தம் ஆகியவற்றால் ஏற்படும் நரம்பு தளர்ச்சியை நீக்க முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்த வேண்டும்.

     நீரிழிவு நோயாளிகள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.

    மாதவிலக்கு காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி,அடி வயிறு வலி என பல உடல் உபாதைகள் ஏற்படும். முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.

     முருங்கைப் பூவை காய வைத்து பொடியாக்கி தேனுடன் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை கோளாறுகள் நீங்கும். 

  முருங்கைப் பூவைக் கொண்டு   முருங்கை பூ பால், முருங்கை பூ சூப், முருங்கைப்பூ சாதம், முருங்கைப்பூ பொரியல், முருங்கை பூ கஷாயம் என பல வகையில் செய்து சாப்பிடலாம்.

No comments:

Post a Comment

Celebrating International Yoga Day: The Synergy of Yoga and Nutrition

Celebrating International Yoga Day: The Synergy of Yoga and Nutrition  The Origin of International Yoga Day      Every year on June 21, peop...