Monday 14 November 2022

உலக நீரிழிவு நோய் தினம் நவம்பர் 14,2022

  உலக நீரிழிவு நோய் தினம் 

நவம்பர் 14,2022 




        உலக நீரிழிவு நோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி  கொண்டாடப்படுகிறது.உலக நீரிழிவு நிறுவனமும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து இந்த தினத்தில் மக்களிடையே நீரிழிவு நோயை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயல்பாடுகளை செய்கின்றன.

     ஒவ்வொரு ஆண்டும் இந்த நீரிழிவு நோய் தினம் ஒவ்வொரு நோக்கத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு கருப்பொருள் நீரிழிவு நோயை பற்றிய கல்வியை அனைவருக்கும் அளிப்போம். இது அனைத்து ஆண்டுகளுக்கும் கருப்பொருளான  நீரிழிவு நோய்க்கான மருத்துவத்தைத் அனைவருக்கும் அடையுமாறு செய்வோம் என்பதன் தொடர்ச்சியாகும்.

     இந்தியாவில் நீரிழிவு நோய் நாளுக்கு நாள் தோறும் அதிகரித்து வருகிறது குழந்தைகளுக்கும்  பெரியவர்களுக்கும்  நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. 

    நீரிழிவு நோய் என்பது நீண்டகால வளர்சிதைமாற்ற குறைபாட்டால் உருவாகும். இன்சுலின் உற்பத்தியில் குறைபாடு அல்லது அதற்கு பதிலளிக்கும் மற்றும் அதன் மூலம் சரியான அளவை பராமரிக்க உடலில் பலவீனமான திறனால் வகைப்படுத்தப்படுகிறது. இது கார்போஹைட்ரேட், புரோட்டீன், மற்றும்  கொழுப்பு ஆகிய வளர்ச்சிதை மாற்றங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்கிறது.

 நீரிழிவு நோயின் வகைகள்

டைப் 1 வகை நீரிழிவு நோய் 

    இது இளம் வயதிலேயே தொடங்கும் நீரிழிவு நோய் பொதுவாக  குழந்தை பருவத்தில் இது உருவாகும். இந்த வகை நீரிழிவு நோய் இருப்பவர்களின் கணையத்தால்  இன்சுலின் ஹார்மோனை சுரக்கச் செய்ய இயலாது. எனவே ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.

டைப் 2 வகை நீரிழிவு நோய் 

    இது பெரியவர்களுக்கு ஏற்படும். இன்சுலின் சுரப்பு குறைபாடு அல்லது இன்சுலின் பயன்பாட்டில் குறைபாடு ஏற்படுவதால் இந்த நோய் உருவாகும் 

கர்ப்பகால நீரிழிவு நோய் 

    இது பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கார்போஹைட்ரேட் சகிப்பின்மையால் ஏற்படுகிறது.

நீரிழிவு நோய் உருவாவதற்கான காரணங்கள் 

  • மரபியல் குறைபாடு 
  • 45 வயதிற்கு மேற்பட்ட மேற்பட்டவர்கள் 
  • உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் 
  • உடலில் கொழுப்புச் சத்து அதிகம் இருப்பது 
  • கர்ப்ப காலத்தின் பொழுது 

நீரிழிவு  நோயின் அறிகுறிகள் 

  • அதிக தாகம் 
  • அதிக உடல் எடை இழப்பு 
  • சோர்வு
  •  ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தல் 
  • அதிக அளவு சிறுநீர் வெளியேறுதல் 
  •  அதிகரித்த பசி 

 நீரிழிவு நோயின் விளைவுகள்  

  • உடலில் சர்க்கரையின் அளவு குறைதல் 
  • கண்பார்வை குறைபாடு 
  • இதய நோய் 
  • பாதங்களில் பாதிப்பு ஏற்படுதல் 
  • நரம்பு பிரச்சனை ஏற்படுதல் 
  • உடல் எடை இழப்பு 

 நீரிழிவு நோய்க்கான உணவுகள் 

சேர்த்து கொள்ள வேண்டியவை 

  • முழு தானியங்கள் 
  • பருப்பு வகைகள் 
  • கீரை வகைகள் 
  • வெண்டைக்காய், பாகற்காய், புடலங்காய், கொத்தவரங்காய், அவரைக்காய், முட்டைகோஸ் போன்ற காய்கறி வகைகள் 
  • கொய்யா, ஆப்பிள்,  பப்பாளி, ஆரஞ்சு,  சாத்துக்குடி போன்ற பழ வகைகள்
  • ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த மீன் வகைகள்
  •  கொழுப்பு சத்து குறைந்த பால் மற்றும் பால் பொருட்கள் 
  • பாதாம், வால்நட், ஆளி விதை, வெந்தயம் முதலியவை 
  • முட்டையின் வெள்ளைக்கரு 

தவிர்க்க வேண்டிய உணவுகள் 

  • பாலிஷ் செய்யப்பட்ட தானியங்கள்
  •  மைதா 
  • கிழங்கு வகைகள் 
  • பேக்கரி பொருட்களான வெள்ளை ரொட்டி குக்கீஸ் 
  • துரித உணவுகள் 
  • பதப்படுத்தப்பட்ட உணவுகள் 
  •  எண்ணெயில் பொரித்த உணவுகள் 
  • எளிதில் ஜீரணமாகும் சர்க்கரை வகைகள் 
  • வெள்ளை சர்க்கரை 
  • கொழுப்பு நிறைந்த உணவுகள் 

நீரிழிவு நோயை தடுப்பதற்கான வழிகள் 

  • ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்
  •  தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
  • ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க வேண்டும் 
  • புகைபிடித்தல் மது அருந்துதல் பழக்கத்தை நிறுத்த வேண்டும்
  • அறிகுறிகள் ஏதேனும் தெரிந்தால் உடனே மருத்துவரை அணுகி சரியான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்

No comments:

Post a Comment

Celebrating International Yoga Day: The Synergy of Yoga and Nutrition

Celebrating International Yoga Day: The Synergy of Yoga and Nutrition  The Origin of International Yoga Day      Every year on June 21, peop...