தேசிய பல்வலி தினம்
பல் நலன் காக்கும் உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களுடன் உங்கள் புன்னகையை மிளிர செய்வோம்.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9 ஆம் தேதி, தேசிய பல்வலி தினம் - பல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், பயங்கரமான பல்வலியைத் தடுக்கும் பழக்கங்களை மேம்படுத்துவதற்கும் கடைபிடிக்கப்படுகிறது. ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் நல்ல வாய் சுகாதாரத்தை பராமரிப்பது முக்கியம்.
பல் ஆரோக்கியத்தின் அடித்தளம்: ஊட்டச்சத்து
கால்சியம் நிறைந்த உணவுகள்:
வலுவான பற்கள் மற்றும் எலும்புகளுக்கு கால்சியம் முக்கியமானதாகும். பால், சீஸ் மற்றும் தயிர் போன்ற பால் பொருட்கள், கீரைகள், பாதாம் மற்றும் வலுவூட்டப்பட்ட தாவர அடிப்படையிலான பால் ஆகியவற்றை உங்கள் உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
பழங்கள் மற்றும் காய்கறிகள்:
பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், உமிழ்நீர் உற்பத்தியைத் தூண்டி, வாயில் அமிலங்களை நடுநிலையாக்குவதற்கும் வாயை சுத்தப்படுத்துவதற்கும் உதவுகிறது.
பாஸ்பரஸ் நிரம்பிய உணவுகள்:
இறைச்சிகள், முட்டைகள் மற்றும் மீன்கள் போன்ற பாஸ்பரஸ் நிறைந்த உணவுகள் பற்களின் கனிமமயமாக்கலுக்கு பங்களிக்கின்றன மற்றும் பற்களின் எனாமலை சரிசெய்ய உதவுகின்றன. இவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பற்களின் வலிமையை அதிகரிக்கலாம்.
வைட்டமின் சி-நிறைந்த உணவு:
ஈறுகளின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் சி இன்றியமையாதது. ஆரஞ்சு, கொய்யா, நெல்லிக்காய், ஸ்ட்ராபெர்ரி மற்றும் கிவி போன்ற சிட்ரஸ் பழங்கள் வைட்டமின் சி நிறைந்தவை. இந்த பழங்களை உட்கொள்வது ஈறு நோயைத் தடுக்கவும் ஈறுகளை ஆரோக்கியமாக பராமரிக்கவும் உதவும்.
தண்ணீர்:
வாய் ஆரோக்கியம் உட்பட ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நீரேற்றமாக இருப்பது முக்கியம். பல் சிதைவுக்கு பங்களிக்கும் உணவுத் துகள்கள், பாக்டீரியாக்கள் மற்றும் அமிலங்களைக் குறைப்பதற்கு நீர் உதவுகிறது.
பல்வலி இல்லாத வாழ்க்கைக்கு மேற்கொள்ள வேண்டிய பழக்கங்கள்:
பல் துலக்குதல் மற்றும் ஃப்ளோசிங்:
நல்ல வாய்வழி சுகாதாரத்தின் அடித்தளம் பல் துலக்குதல் மற்றும் ஃப்ளோசிங் ஆகும். ஃவுளூரைடு பற்பசை மற்றும் ஃப்ளோஸைப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பல் துலக்க வேண்டும்.
தொடர் பல் பரிசோதனைகள்:
பற்களை சுத்தம் செய்ய மற்றும் பரிசோதிக்க பல் முறுத்துவரை தொடர் இடைவெளியில் சந்திப்பது அவசிய,. பற்களை மருத்துவர் சுத்தம் செய்வதன் மூலம் பல் சொத்தை மற்றும் ஈறுகளில் நோய் தொற்றை தடுக்கலாம்.
சர்க்கரை மற்றும் அமில உணவுகளின் அளவை குறைக்கவும்:
சர்க்கரை மற்றும் அமில உணவுகள் பல் எனாமலை அரித்து பற்சொத்தைக்கு வழி வகுக்கும். உங்கள் பற்களை சிதைவிலிருந்து பாதுகாக்க சர்க்கரை தின்பண்டங்கள் மற்றும் அமில பானங்களை உட்கொள்வதை குறைக்கவும்.
பு ஃளூரைடு:
பு ஃளூரைடு பல் எனாமலை பலப்படுத்தி பற்சொத்தையை தடுக்க உதவுகிறது. உங்கள் பற்பசையில் ப்ளுரைடு அளவை கவனத்தில் கொள்ளவும்.
புகையிலை பொருட்களை தவிர்க்கவும்:
புகையிலை பயன்பாடு ஈறு நோய் மற்றும் பல் இழப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும். புகைபிடிப்பதை நிறுத்துவது, மற்றும் புகையிலையை பயன்படுத்தாமல் இருப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் உங்கள் வாய் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
இந்த தேசிய பல்வலி தினத்தில், பற்களுக்கு உகந்த உணவுகள் மற்றும் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழக்கவழக்கங்களைக் கொண்டு நமது புன்னகையை வளர்ப்பதற்கு உறுதி ஏற்போம். ஒரு துடிப்பான புன்னகை தன்னம்பிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நல்வாழ்வின் பிரதிபலிப்பாகவும் இருக்கிறது. நல்ல ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை தழுவி, பல்வலியைத் தடுத்து, வலியற்ற புன்னகையுடன் வாழ்நாளை கொண்டாடுவோம் !
No comments:
Post a Comment