உலக தாய்ப்பால் வாரம்
(1-7) ஆகஸ்ட் 2022
உலக தாய் பால் வாரம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 1 முதல் 7 ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது . இதன் மூலம் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதே ஆகும்.
உலக தாய்ப்பால் வாரத்திற்கான இந்த ஆண்டு கருப்பொருள்
"தாய்ப்பால் கொடுப்போம் வாருங்கள்
அறிவூட்டல் மற்றும் ஆதரவளித்தல்"
தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நெருக்கம் அதிகரிக்கிறது. குழந்தையை நெருக்கமாக வைத்திருப்பதன் மூலம் ஆக்ஸிடோசின் சுரக்கிறது. இவை தாய், குழந்தை இருவரின் நலன் காக்க உதவுகிறது.
உலக சுகாதார அமைப்பு குழந்தையின் பிறந்தது முதல் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே உணவாக கொடுக்க அறிவுறுத்துகிறது. இரண்டு வயது வரை இணை உணவுகள் உடன் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
தாய்மார்கள் அனைவரும் குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களையும் , பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு மருத்துவ பணியாளர்கள் வேண்டும். தாய்ப்பால் கொடுப்பது குழந்தை இறப்பை குறைக்கிறது.
தாய்ப்பால் தருவதால் பெரும் நன்மைகள்
குழந்தைக்கு
- தாய்ப்பால் குழந்தைக்கு தேவையான அனைத்து ஊதச்சத்துக்களை உடையது.
- எளிதில் செரிமானம் ஆக கூடியது
- குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
- குழந்தை சரியான எடையை பெறவும், இளம் வயதில் அதிக உடல் எடை அதிகரிப்பை தடுக்கிறது.
- தாய்ப்பால் குழந்தைகள் ஆஸ்துமா, ஒவ்வாமை, மற்றும் இதய நோய்கள் உண்டாவதில் இருந்து தற்காக உதவுகிறது.
தாய்மார்களுக்கு
- உடல் பருமனை குறைக்க உதவுகிறது
- கர்ப்ப காலத்தில் விரிவடைந்த கர்ப்ப பை அதனுடைய பழைய நிலையை அடைய உதவுகிறது
- மனஅழுத்தம், நீரிழிவு நோய், இதய நோயில் இருந்து தற்காத்து கொள்ள உதவுகிறது.
- தாய்ப்பால் தருவது ஒரு இயற்கையான குடும்ப கட்டுப்பாடு முறையாகும்.
- தாய்ப்பால் தருவது நேரத்தையும், பணத்தையும் சேமிக்க உதவுகிறது.
தாய்ப்பால் தருவதற்கான வழிமுறைகள்
- மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்க வேண்டும். போர்முலா மில்க் பரிந்துரைப்பதை குறைக்க வேண்டும். முறையான தாய்ப்பால் தரும் பயிற்சிகளை கற்று தர வேண்டும்.
- கர்ப்ப காலத்தில் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை கர்ப்பிணி பெண்களிடம் கலந்துரையாட வேண்டும்.
- குழந்தை பிறந்தவுடன் தாயுடன் அணைப்பை ஏற்படுத்தி சரியான முறையில் தாய்ப்பால் கொடுக்க வைக்க வேண்டும்.
- குழந்தையை கையில் வைத்திருக்கும் முறை, குழந்தை பால் அருந்தும் முறையை கவனிக்க வேண்டும். தாய்மார்களை தாய்ப்பால் தருவதால் வரும் பிரச்சனைகளை எதிர் கொள்ள தயார் படுத்த வேண்டும்.
- எப்பொழுதும் குழந்தை தாயுடன் இருக்க வேண்டும். தாய்ப்பால் பற்றாக்குறை இருக்கும் பொழுது தாய்ப்பாலை தானமாக பெற்று குழந்தைக்கு கொடுக்க முயற்சிக்க வேண்டும்.
- தாய்மார்கள் குழந்தை எப்பொழுது பசியாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தாய்ப்பால் தரும் நேரங்களை குறைத்து கொள்ள கூடாது.
No comments:
Post a Comment