Friday 19 August 2022

தலைவலியில் இத்தனை வகைகளா? - 2

 

தலைவலியில் இத்தனை வகைகளா? - 2

              தலைவலி


                      


இரண்டாம் நிலைத் தலைவலிகள்


        இரண்டாம் நிலைத் தலைவலிகள் என்பது நம் உடலில் ஏற்பட்டுள்ள பிரச்சனையின் அறிகுறியாகும். பிரச்சனை என்னவென்பதை கண்டறிந்து அதற்கு ஏற்ற சிகிச்சையை மேற்கொள்வதே இந்த வகை தலைவலிகளை குணப்படுத்தும்.

சைனஸ் தலைவலி 


        சில நேரங்களில் ஒவ்வாமையின் காரணமாக தலைவலி ஏற்படலாம். சைனஸ் என்பது நம் மூக்குப்பகுதியில் உள்ள சிறிய காற்று பைகள் போன்ற அமைப்பாகும். சில நேரங்களில் இந்த பைகள் பாக்டீரியா, வைரஸ் அல்லது ஒவ்வாமையின் காரணமாக வீங்கி அடைத்து கொள்ளும். அதை தான் சைனஸ் இன்பெக்ஷன் என கூறுகிறோம். 

        சைனஸ் தலைவலி காலநிலை மாற்றத்தால் ஏற்படலாம். இந்த தலைவலி மூக்குப்பகுதியிலும், நெற்றியிலும் வலி உண்டாகும். 

ஹார்மோன் தலைவலி 


        பெண்களுக்கு ஹார்மோன் மாற்றத்தால் உண்டாகும் இந்த தலைவலி மாதவிடாய் நாட்களிலும், கர்பகாலத்திலும் அதிகமாக இருக்கும். மாதவிடாய் நாட்களுக்கு முன்னும், பின்னும், தலைவலி உருவாக வாய்ப்புகள்  உண்டு.  இதை மாதவிடாயில் தோன்றும் ஒற்றை தலைவலி எனவும் கூறலாம்.


காபின் தலைவலி (caffeine headache)


        காபின் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது.அளவுக்கு அதிகமா காபின் எடுத்து கொள்வது தலைவலியை உண்டாக்கும். ஒற்றைத் தலைவலியை ஊக்குவிக்கும் ஒரு காரணியாக காபின் செயல்படுகிறது.  காபின் தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு வரை எடுத்து கொள்வது ஒற்றைத் தலைவலி வராமல் இருக்க உதவும்.

உடல் உழைப்புக்கு பின் வரும்  தலைவலி (exertion headache )


        அதிக நேர உடற்பயிற்சி, பளு தூக்கும் பயிற்சி, நீண்ட தூர ஓட்டப்பயிற்சி என அதிக உடல் உழைப்பு தேவைப்படும் பயிற்சிகளுக்கு பிறகு தலைவலி உண்டாகும். ஏனெனில் இந்த பயிற்சிகளை செய்யும் பொழுது மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். தலையின் இரண்டு புறத்திலும் வலி உண்டாகும். 

        இந்த தலைவலி சில நிமிடங்கள் மட்டுமே இருக்கும். அதிக நேரம் நீடித்தால் உடனே மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

உயர் இரத்த அழுத்தத்தால் தலைவலி (Hypertension headache )


            உயர் இரத்த அழுத்தம் தலைவலியை உண்டாக்கும். இது உடலுக்கு உடனடியாக சிகிச்சை தேவைப்படுகிறது என்பதற்கான அறிகுறியாகும். இரத்த அழுத்தம் அதிக அளவு உயரும் பொழுது இந்த தலைவலி ஏற்படும். இதை சரியாக கவனித்து சிகிச்சை செய்யா விட்டால் மாரடைப்பு, மூளையின் இரத்த நாளங்களில் பாதிப்பு ஆகியவை ஏற்படும். 

ரீபௌண்ட் தலைவலி  (Rebound  headache )


        ரீபௌண்ட் தலைவலி அதிகமாக மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் மிதமாக ஏற்படும் ஒரு தலைவலியாகும். வலி நிவாரணிகளை அதிகமாக எடுத்து கொள்ளும் பொழுது இந்த தலைவலி உண்டாகும். மருத்துவர் பரிந்துரைக்காத மருந்துகளை உட்கொள்ளாமல் இருப்பதே இந்த வகை தலைவலி வராமல் தடுப்பதற்கு வழியாகும்.

போஸ்ட் - ட்ருமாட்டிக் தலைவலி (post - traumatic headache)


        போஸ்ட் - ட்ருமாட்டிக் தலைவலி என்பது ஏதோவொரு சூழ்நிலையில்  தலையில் காயம் ஏற்பட்டதற்கு  பிறகு உருவாகும் ஒரு தலைவலி ஆகும். இது ஒற்றைத்தலைவலி அல்லது டென்ஷன் தலைவலி போல் இருக்கும். பொதுவாக தலையில் காயம் ஏற்பட்ட பிறகு ஆறு முதல் பனிரெண்டு மாதங்கள் வரை இருக்கும் .

முதுகெலும்பு தலைவலி (spinal  headache )


        முதுகெலும்பு தலைவலி நம் தண்டுவட திரவத்தின் அழுத்தம்  குறைவதால் ஏற்பட்டு இடுப்புப்பகுதியில் வலியை உண்டாக்கும்.  நெற்றி, முன் கழுத்து, தலையின் பின்புறம் ஆகிய பகுதிகளில் வலி உண்டாகும்.  குமட்டல், வாந்தி, கண் பார்வையில் மாற்றம், கைகளில் வலி உண்டதால் ஆகியவை இந்த தலைவலியின் அறிகுறிகளாகும்.




No comments:

Post a Comment

Celebrating International Yoga Day: The Synergy of Yoga and Nutrition

Celebrating International Yoga Day: The Synergy of Yoga and Nutrition  The Origin of International Yoga Day      Every year on June 21, peop...