Thursday, 25 August 2022

கீரைகளும் அதன் பலன்களும் - 2

 கீரைகளும் அதன் பலன்களும்


பொன்னாங்கண்ணி கீரை  






    பொன்னாங்கண்ணி கீரை நம் இந்தியாவில் அதிகம் கிடைக்கக்கூடிய ஒரு கீரை வகையாகும். இதில் இரண்டு வகை உள்ளது பச்சை நிறத்தில் இருப்பது இந்தியாவில் விளைய கூடியது. சிவப்பு நிறத்தில் உள்ளது சீமை பொன்னாங்கண்ணி என அழைக்கப்படுகிறது. நாட்டு வகை கீரை அதிக நற்குணங்களை உடையது. இதை பொரியல், கூட்டு, மசியல், சூப் என பல விதங்களில் சமைத்து சாப்பிடலாம். 

    இந்த கீரையை நம் உணவில் சேர்த்து கொள்வதால் சருமம் பொன் போல் மின்னும். இதை தவிர இந்த கீரை அதிக மருத்துவக்குணங்களை உடையது. அவை :

1.உடல் எடை குறைய பொன்னாங்கண்ணி கீரையை நம் உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும். கீரையை மிளகுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

2. பொன்னாங்கண்ணி கீரை உடல் வலிமையை அதிகப்படுத்தும். எலும்புகளை வலுப்படுத்தும்.

3. பொன்னாங்கண்ணி கீரை வாய் துர்நாற்றத்தை போக்க உதவும்.

4. இதயம் மற்றும் மூளைக்கு புத்துணர்வை அளித்து நாம் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக  செயல்பட  பயன்படுகிறது. 

5. கல்லீரல் மற்றும் மூல நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

6. பொன்னாங்கண்ணி கீரையை அடிக்கடி உட்கொள்வதால் கண் பார்வை நன்றாக தெரியும்.

7. இரத்தத்தை சுத்திகரிக்கும்.

8.  அதிக நேரம் கணிப்பொறி  அல்லது அலைபேசி உபயோகிக்கும் பொழுது ஏற்படும் கண் சிவப்பை சரி செய்ய பொன்னாங்கண்ணி கீரை உதவுகிறது.

9. பொன்னாங்கண்ணி கீரை சரும பிரச்சனைகளை சரி செய்து மேனி அழகு பெற உதவும்.

10. ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட இருமலை குறைக்க உதவுகிறது.

11.  உடல் எடை அதிகரிக்க பொன்னாங்கண்ணி கீரையை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட வேண்டும்.

12. பொன்னாங்கண்ணியில் வைட்டமின் ஏ, பி, சி , தாது உப்புக்களான இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் உள்ளது.








No comments:

Post a Comment

நீரிழிவு மேலாண்மைக்கான சிறந்த இந்திய உணவுகள்

நீரிழிவு மேலாண்மைக்கான சிறந்த இந்திய உணவுகள்       நீரிழிவு நோயை நிர்வகிப்பது பெரும்பாலும் அதிக மனஅழுத்தத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக முரண்ப...