கீரைகளும் அதன் பலன்களும் - 5
முடக்கத்தான் கீரை
முடக்கறுத்தான் கீரை முடக்கு நோய்களை வேரறுக்கும் தன்மை உடையது. முடக்கற்றான், முடக்கத்தான் என பேச்சு வழக்கில் அழைக்கப்படுகிறது. முடக்கத்தான் கீரை சமீப நாட்களில் மூட்டு வலிக்கு அதிகமாக பயன்படுத்த படுகிறது.
முடக்கத்தான் கீரையை இட்லி, தோசை, சூப், பொடி, துவையல், சட்னி என பல வகையில் நம் உணவில் சேர்த்து கொள்ள முடியும்.
முடக்கத்தான் கீரையின் மருத்துவ பலன்கள்
1. முடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு சிறந்த வலி நிவாரணியாக செயல்படும். இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவை குறைத்து வாத நோயை குறைக்க உதவுகிறது.
2. முடக்கத்தான் இலைகளை கைப்பிடி அளவு எடுத்து நீரில் நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி பருக உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்.
3. முடக்கத்தான் இலை பொடியுடன் நல்லெண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து சாப்பிட இருமல் கட்டுப்படும்.
4. நல்லெண்ணையில் முடக்கத்தான் இலைகளை இட்டு காய்ச்சி அந்த எண்ணையை அடிபட்ட இடத்தில் தடவ வலி குறையும்.
5. பிரசவத்திற்கு பின் பெண்களின் கருப்பையில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்றும் தன்மை உடையது முடக்கத்தான்.
6. பசியினை தூண்ட பயன்படுகிறது.
7. முடக்கத்தான் கீரையை நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி பருக மூல நோய்கள் குணமாகும்.
8. முடக்கத்தான் கீரையை நன்றாக அரைத்து தோல் நோய்கள் இருக்கும் இடத்தில பற்று போல் இட நல்ல நிவாரணம் கிடைக்கும்.
9. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக செயல்படுகிறது.
10.முடக்கத்தான் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் வாத தன்மையை குறைத்து மூட்டு வலி குறையும். முடக்கு வாதம் வராமல் காக்கவும் பயன்படுகிறது.
11. முடக்கத்தான் இலைகள் சேர்த்து காய்ச்சிய தேங்காயெண்ணையை தலைக்கு தடவி வர பொடுகு தொல்லை நீங்கும்.
12. முடக்கத்தான் கீரையை வெந்நீரில் இட்டு ஆவி பிடிக்க ஜலதோஷத்தால் வரும் தலைவலி சரியாகும்.
No comments:
Post a Comment