வாழைப்பூ

வாழைப்பூ 



    பூக்கள் இயற்கையின் படைப்பில் முக்கியமானவை. பல பூக்களை நாம் உணவாக உட்கொள்ள முடியும். நம் அன்றாட உணவில் பல பூக்களை உணவாக சேர்த்துகொள்கின்றோம். அதில் மிகவும் முக்கியமான ஒரு பூ வாழைப்பூவாகும்.

     வாழை மரத்தின் அனைத்து பகுதிகளும் நமக்கு பயன்படுகிறது. வாழைப்பூ அதிக பயன்களை தரக்கூடியது.


1. வாழைப்பூவை, சின்ன வெங்காயம்,  பூண்டு,மிளகு சேர்த்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று, உடலுக்கு தேவையான இன்சுலினை சரியாக சுரக்க செய்து சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.

2. வாரம் இருமுறை வாழைப்பூவை சாப்பிட மலச்சிக்கல் மற்றும் மூலநோய்கள் குணமாகும்.

3. வாழைப்பூவுடன், பாசிப்பருப்பை சேர்த்து கடைந்து நெய் சேர்த்து சாப்பிட அதிக வெப்பத்தினால் ஏற்படும் உடல் சூடு தணியும்.தணியும்.

4. வாழைப்பூவை நீரில் சேர்த்து சீரகம், மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அருந்த அஜீரணக்கோளாறு, வயிற்றுக்கடுப்பு ஆகியவை நீங்கும்.

5. கர்ப்பப்பைக்கு வாழைப்பூ மிகவும் நல்லது. மாதவிடாயின் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.

6. வாழைப்பூ ரசம் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும். வறட்டு இருமல் நீங்கும்.

7. வாழைப்பூ மலட்டு தன்மையை நீக்கி குழந்தைப்பேறு கிடைக்க உதவும்.

8. சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து இரத்த சோகையை நீக்கும். ஈரத்தில் கொழுப்புகள் குறைக்கப்பட்டு இரத்த ஓட்டம் சீராகும்.

9.கருவுற்றிருக்கும் பெண்களுக்கு கருவுற்ற முதல் மாதங்களில் ஏற்படும் தலைசுற்றல், உடல் மற்றும் மனசோர்வை களைவதில் வாழைப்பூ சிறப்பாக செயல்படுகிறது.

10. வாழைப்பூவை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து கொள்வதால் மூளை விழிப்புணர்வு அதிகரிக்கும்.

11. வாழைப்பூ வயிறு, குடல் மற்றும் வாய்ப்புண்களை குணமாக்க பயன்படுகிறது.

12. இரத்த அழுத்தத்தை சீராக வைத்து இதய நோய்கள் வராமல் காக்கிறது.


    வாழைப்பூ குழம்பு, ரசம், பொரியல், கூட்டு, உசிலி, வடை மற்றும் அடை என பல வகையில் நாம் சமைத்து சாப்பிட முடியும்.


Comments

Popular posts from this blog

What Is Good to Eat on an Empty Stomach in the Morning?

Traditional Tamil Foods to Boost Immunity

Common Nutrition Mistakes Among Tamil Nadu People