Friday, 12 August 2022

சங்குப்பூ

சங்குப்பூ 







       சங்குப்பூ  எளிதில் வளரக்கூடிய ஒரு கொடி வகை. முன்பெல்லாம் தெருவோரங்களிலும்,  வேலி படல்களிலும் வளரும். சங்குப்பூ  நீல நிறத்திலும், ஊதா நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் காணப்படும்.  பொதுவாக நீல நிறத்தில் பூக்கும் பூக்களே அதிகம்.  இந்த பூவானது அதிக மருத்துவ குணங்களை கொண்டது.  நம் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

    சங்குப்பூவை  கொதிக்கும் நீரில் சேர்த்து தேன் கலந்தும் அல்லது கலக்காமலும் பருகலாம். 


சங்குப்பூவின் மருத்துவ குணங்கள் 


1.  சங்குப்பூ சாற்றை அருந்துவதால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

2. சங்குப்பூ சாறு அருந்துவதால் பதட்டம் மற்றும் மன உளைச்சல் குறையும்.

3. சங்குப்பூ சாறு நீரிழிவு நோய்  வராமல் தற்காத்து கொள்ள உதவுகிறது.

4. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைத்து இதய நோயில் இருந்து பாதுகாக்கிறது 

5. சங்குப்பூ உடலில் உள்ள அதிக நீரையும், உப்பையும் வெளியேற்ற உதவி உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

6. சங்குப்பூ சாறு உடலின் வெப்ப நிலையை குறைத்து காய்ச்சலை கட்டுப்படுத்தும்.

7. சங்குப்பூ செடியின் இலைகளை சாறு எடுத்து அருந்த மாதவிடாயினால் ஏற்படும் அதிக இரத்த போக்கை குறைக்க உதவுகிறது.

8. சங்குப்பூ சாறு ஆஸ்துமா போன்ற  சுவாச நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது.

9. சங்குப்பூ வழுக்கையையும், இளநரையையம்  சரிப்படுத்த பயன்படுகிறது.

10.  சங்குப்பூ சாறு கல்லீரலை பலப்படுத்தும்.




 

No comments:

Post a Comment

நீரிழிவு மேலாண்மைக்கான சிறந்த இந்திய உணவுகள்

நீரிழிவு மேலாண்மைக்கான சிறந்த இந்திய உணவுகள்       நீரிழிவு நோயை நிர்வகிப்பது பெரும்பாலும் அதிக மனஅழுத்தத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக முரண்ப...