பேரிக்காய்
பேரிக்காய் ஒரு மழைப்பருவ பழம். இது ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை கிடைக்கும். இது அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டது.
பேரிக்காயின் பலன்கள்
1. பேரிக்காய் அதிக நார்ச்சத்து உடையது. மலச்சிக்கலை சரிசெய்ய உதவுகிறது.
2. பேரிக்காய் குறைந்த கலோரியை கொண்டது. எனவே உடல் பருமன் குறைவதற்கு பயன்படுகிறது.
3. பேரிக்காய் அதிக நீர்ச்சத்தை உடையது, உடலில் நீரேற்றமாக இருக்க உதவுகிறது.
4. இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கும், இதயத்தில் உள்ள இரத்த நாளங்களை பலப்படுத்த உதவுகிறது.
5. கண் பார்வை குறைபாடு வராமல் தடுக்கிறது.
6. தாமிரச்சத்து நிறைந்தது. தாமிரம் நரம்பு செயல்பாட்டை சீர்படுத்த உதவுகிறது.
7. புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.
8. அதிக நார்ச்சத்து இருப்பதால் செரிமானமாக நேரம் எடுத்து கொள்ளும். எனவே இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
9. பொட்டாசியம், வைட்டமின் ஏ, கே, சி ஆகிய சத்துக்கள் உடையது.
10. எளிதில் கிடைக்க கூடிய விலை குறைவான ஒரு ஆரோக்கிய உணவு பேரிக்காய்.
No comments:
Post a Comment