விளாம்பழம்
விளாம்பழம் மிக விலை குறைவாக கிடைக்கக்கூடிய அதீத மருத்துவ குணங்களை கொண்ட பழமாகும். அகத்தியர் மருத்துவம் இதனை முதன்மை பழம் என குறிப்பிடுகிறது. விளாம்பழம் ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை அதிகமாக கிடைக்கும்.
விளாம்பழத்தின் ஓட்டை நீக்கி உள்ளிருக்கும் விழுதுகளை நாட்டு சர்க்கரையுடன் அல்லது வெல்லம் சேர்த்து சாப்பிட வேண்டும். இந்த பழம் புளிப்பும், இனிப்பும் கலந்த சுவை உடையது. நல்ல பழுத்த விளம்பழங்களையே சாப்பிட வேண்டும்.
விளாம்பழத்தை பயன்படுத்தி ஜாம், ஜூஸ் மற்றும் ரசம் தயாரிக்கலாம்.
மருத்துவ பலன்கள்
1. விளாம்பழத்தை சாப்பிடுவதால் வாதம், பித்தம் தொடர்புடைய அனைத்து நோய்களும் குணமாகும்.
2. அதிக அளவு சுண்ணாம்புச்சத்து நிறைந்து உள்ளதால் எலும்புகளை வலுவாக்கும்.
3. செரிமான கோளாறுகளை சரிசெய்து பசியை தூண்டவும் விளாம்பழம் உதவுகிறது.
4. நரம்பு தளர்ச்சியை குணப்படுத்த உதவும்.
5. வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால் கண் நோய்கள் வராமல் பாதுகாக்க உதவும்.
6. ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
7. இதயத்தை பலப்படுத்தும்.
8. மலச்சிக்கலை சீராக்க பயன்படுகிறது.
9. விளாம்பழம் வைட்டமின் - சி குறைபாட்டை சரிசெய்ய பயன்படுகிறது.
10. விளாம்பழ மரத்தின் இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்த உயர் இரத்த அழுத்தம் குறையும்.
No comments:
Post a Comment