கீரைகளும் அதன் பலன்களும்
மணத்தக்காளி கீரை மருத்துவ மூலிகையாக பயன்படும் கீரை வகைகளில் ஒன்று. இந்த கீரை செடியின் இலைகள், அதன் பழம் ஆகியவற்றை நேரடியாக உணவில் பயன்படுத்தலாம். மணத்தக்காளி காய்களை வற்றலாக பயன்படுத்தலாம். இந்த கீரையை கொண்டு குழம்பு, கூட்டு, பொரியல், மசியல் என பல உணவுகளை சமைக்க முடியும்.
மணத்தக்காளி கீரை அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டது. இதில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது . அதனால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் :
1. மணத்தக்காளி கீரை வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண்களை குணப்படுத்தப் பயன்படுகிறது.
2. சருமத்தில் ஏற்படும் நோய் தொற்றை குணமாக்க மணத்தக்காளி கீரையின் சாறு உதவுகிறது.
3. உடலின் வெப்பநிலை சீராக இருக்க உதவுகிறது.
4. சிறுநீர் மற்றும் வியர்வையின் அளவை அதிகரித்து உடலில் உள்ள அதிக நீரை வெளியேற்றுகிறது.
5. காய்ச்சலால் ஏற்படும் கை, கால் வலியை போக்க உதவுகிறது.
6.உடல் களைப்பை போக்கி நல்ல உறக்கத்தை கொடுக்கும்.
7. காச நோய் உள்ளவர்களுக்கு மணத்தக்காளிப் பழம் அருமருந்தாகும்.
8. மணத்தக்காளி கீரையை ஆண்கள் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் விந்தணுக்கள் வலிமையுடன் இருக்கும்.
9. எளிதில் கருத்தரிப்பதற்கும் கரு ஆரோக்கியமாக இருப்பதற்கும் உதவுகிறது.
10. செரிமான பிரச்சனைகளை குறைத்து மலச்சிக்கலை சரிசெய்கிறது.
No comments:
Post a Comment