சாத்துக்குடி பழச்சாறு
சாத்துக்குடி இனிப்பும், புளிப்பும் நிறைந்த விலை குறைவான சத்து மிக்க பழம்.இந்த சிட்ரஸ் பழ வகையில் 90% நீர்ச்சத்து நிறைந்திருக்கிறது. சாத்துக்குடி குறைவான கலோரிகளை கொண்டது. இதில் நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் - சி, மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது.
1. சாத்துக்குடி பழச்சாற்றை அருந்துவதால் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையின் நச்சுத்தன்மையை போக்குகிறது. சிறுநீர்த்தொற்று பிரச்சனை இருப்பவர்கள் தினமும் சாத்துக்குடி பழச்சாறு அருந்துவது தொற்றை இல்லாமல் செய்யும்.
2. சாத்துகுடி ஆண்டி கார்சினோஜெனிக், ஆண்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஆண்டி பயாடிக் பண்புகளை கொண்டுள்ளது. இது வாய்ப்புண், வயிற்றுப்புண் அவதி கொண்டிருப்பவர்களுக்கும் வெதுவெதுப்பான நீரில் சாத்துக்குடி பழச்சாற்றை அருந்த புண்கள் குணமாகும்.
3. உடலில் நீர் இழப்பு ஏற்படும் பொழுது அதிக களைப்பை அடையும். களைப்பை தீர்க்கும் பானமாகவும், ஆற்றல் தரும் பானமாகவும் சாத்துக்குடி பழச்சாறு இருக்கும்.
4. தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி பழச்சாறு குடிப்பதன் மூலம் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்க முடியும். இதன் மூலன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்த செய்கிறது.
5. சாத்துக்குடி பழச்சாறு கீல்வாதம், முடக்குவாதம் போன்றவற்றை தடுக்கும் வகையில் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க செய்கிறது.
6.குடல் இயக்கத்தை சீராக்கி, வயிற்றில் உற்பத்தியாகும் அமில செரிமான சாறுகளை நடுநிலையாக்குவதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
7. சாத்துக்குடி பழச்சாறு பல்வேறு வகையான புற்றுநோயை எதிர்த்து போராட உதவுகிறது.
8.குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி மலச்சிக்கலை தடுக்கிறது. மலச்சிக்கல் இருப்பவர்கள் சாத்துக்குடி பழச்சாறுடன் உப்பு சேர்த்து அருந்த நெஞ்செரிச்சல் மற்றும் அமில பின்னோட்டத்தையும் குறைக்கிறது.
9. சாத்துக்குடி பழச்சாறு காய்ச்சலின் அறிகுறியையும், தீவிரத்தையும் கட்டுப்படுத்துகிறது. ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள் சாத்துக்குடி பழச்சாறுடன் இஞ்சிச்சாறும், சீர்பொடியும் கலந்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
10. நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மூளை காய்ச்சல் மற்றும் மன நோய்களுக்கு சிகிச்சையளிக்க சாத்துக்குடி சாறு உதவுகிறது.
11. சாத்துக்குடி சாறு கண்களில் நோய்த்தொற்று மற்றும் கண்புரை வரலாம் தடுக்க உதவும்.
12. உடல் எடை குறைவதற்கு உதவுகிறது. சாத்துக்குடி சாறை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் உடல் எடை குறையும்.
13. கர்ப்பகாலத்தில் மசக்கையால் ஏற்படும் அதிக நீர் வெளியேறி உடலில் நீர் பற்றாக்குறையை ஏற்படுத்தும். இதை தடுப்பதற்கு சிறந்த நிவாரணியாக சாத்துக்குடி பழச்சாறு இருக்கிறது.. கருவின் வளர்ச்சிக்கும் நன்மை செய்யும். மசக்கை உணர்வை குறைக்கவும் உதவும்.
No comments:
Post a Comment