உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்கும் பழச்சாறு வகைகள்
பசலைக் கீரை பழச்சாறு
தேவையான பொருட்கள்
பசலைக் கீரை - 100 கிராம்
பச்சை திராட்சை - 30 எண்கள்
வெள்ளரிக்காய் - 50 கிராம்
துளசி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
புதினா இலைகள் - ஒரு கைப்பிடி அளவு
எலுமிச்சை சாறு - ஒரு எலுமிச்சை பழத்தில் இருந்து எடுத்தது.
செய்முறை
1. பசலைக் கீரை, புதினா இலைகளை சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.
2. பச்சை திராட்சையை நீரில் 10 நிமிடங்கள் போட்டு வைத்து நன்றாக கழுவி எடுத்து கொள்ளவும்
3. வெள்ளரிக்காய் நீரில் நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக்கி கொள்ளவும்.
4. பின்னர் மிக்ஸியில் பசலைக்கீரை, புதினா இலைகள், பச்சை திராட்சை, வெள்ளரிக்காய் துண்டுகள், எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
5. பருக கொடுக்கும் பொழுது துளசி விதைகளை சேர்த்து கலக்கி கொடுக்கவும். ஐஸ் கட்டிகள் சேர்க்க கூடாது.
பலன்கள் :
1. அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.
2. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமான சக்தியை அதிகரிக்கிறது.
3. உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.
4. வைட்டமின் சி, பி 6, கே, தாது உப்புக்களான மாங்கனீசு, பொட்டாசியம் நிறைந்தது.
5. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
6. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து இதய நோய் வராமல் தடுக்கிறது .
7. உடல் பருமனை குறைப்பதற்கு பயன்படுகிறது.
8. எலும்புகளை வலுவாக்கும்.
No comments:
Post a Comment