மலச்சிக்கலை தீர்ப்பது எப்படி?
மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் குறைந்த அளவு நீர் அருந்துவதாகும். அதை தவிர நார் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பதும், அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பதும், மலச்சிக்கலை உருவாக்கும். மனஅழுத்தமும் மலச்சிக்கலை உருவாக்கும் காரணியாகும்.
௨. முழு தானியங்கள், பருப்பு வகைகள் உணவில் தினமும் சேர்த்து கொள்ள வேண்டும்.
௩. நீர் தேவையான அளவு அருந்த வேண்டும்.
௪. காபி - 200 மில்லி கிராம் அளவு அருந்தலாம்.
௫. சியா விதைகள், ஆளி விதைகள் - ஐந்து கிராம் அளவு சேர்ப்பது மலச்சிக்கலை தீர்க்கும்.
௬. ஒரு நாளைக்கு குறைந்தது நூறு கிராம் அளவு பழங்களை உட்கொள்ள வேண்டும். பழமாக சாப்பிடும் பொழுது அதில் உள்ள நார் சத்து முழுமையாக உடலில் சேரும்.
௭. உலர் பிளம் பழம் ப்ரூன்ஸ் என்பதும். நித்தமும் நான்கு அல்லது ஐந்து ப்ரூன்ஸ் சாப்பிடும் பொழுது மலச்சிக்கலை தவிர்க்க உதவும்.
௮. நம் பாரம்பரியத்தின் பொருளான ஆமணக்கு எண்ணெய்,நடைமுறையில் விளக்கெண்ணெய் என கூறப்படுவது சிறந்த மலமிளக்கி ஆகும். எனவே ஆறு மாதத்திற்கு ஒரு தடவை இதை எடுத்து கொள்வது நம் குடலை சுத்தம் செய்து மலச்சிக்கலை தீர்ப்பதோடு, குடல் நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்க உதவும்.
* மனஅழுத்தத்தை சமன் செய்து நல்ல மனநிலையை ஏற்படுத்தி கொள்வது மலச்சிக்கலை எளிதில் தீர்க்கும்.
* ஒரு நாளைக்கு குறைந்தது 45 நிமிடங்கள் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
* அதிக எடை இருப்பின் எடையை குறைத்து நம் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை பராமரிக்க வேண்டும். சரியான உடல் எடையுடன் இருப்பது அநேக நோய்கள் நம்மை தற்காத்து கொள்ள உதவும்.
* கர்பகாலத்தில் ஏற்படும் மலசிக்கலை சரி செய்ய நார் சத்து உணவுகளை உண்பதும், தேவையான அளவு நீர் எடுத்து கொள்வதும் வழிகள் ஆகும்.
* கர்ப்பகாலத்தில் கொடுக்கப்படும் குங்குமப்பூ நார் சத்து நிறைந்தது, மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமாக உள்ளது. எனவே தான் ஆறு மாதங்களுக்கு பிறகு தினமும் குங்கமப்பூ இரவில் பாலுடன் சேர்த்து அருந்த வேண்டும்.
* தொடர்ச்சியாக குங்குமப்பூ பால் குடிப்பதால் நார் சத்து மலச்சிக்கல் உருவாவதை கட்டுப்படுத்தும்.ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நமது உடலில் உள்ள கழிவுகளை சுத்தம் செய்வதால் மேற்புறத்தோல் அழகாக இருக்கும் அதையே குங்கம்பூ சாப்பிட்டால் குழந்தை நல்ல நிறமாக இருக்கும் என கூறுகின்றனர்